முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்படும்..! ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்படும்..! ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

நாடு முழுக்க நான்காம் கட்ட அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ஒப்புதலின்படி படிப்படியாக தளர்வுகளை கையாண்டு வருகிறது. 3ம் கட்ட பொதுமுடக்கம் வரையில் திறக்கப்படாமல் இருந்த மதுக்கடைகள், , தேநீர் கடைகள் ஆகியவற்றை தமிழக அரசு சென்னை நீங்கலாக திறக்க அனுமதி வழங்கியது.

இதனால் சென்னையில் உள்ள கடை உரிமையாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடையில் வேலை பார்க்கும் பணியாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டுமென முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்தனர்.

அந்த மனு மீதான விசாரணைக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் சென்னையில் தற்போது சலூன் கடைகளை திறக்கப்படவில்லை எனவும், கள நிலவரங்களை பொறுத்து சென்னையில் சலூன் கடைகளை தொடக்க அனுமதி வழங்கப்படுமெனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம் வழக்கை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...