முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சென்னை மருத்துவரின் கடைசி ஆசை..! முதல்வர் கூறிய ஆறுதல்...!

சென்னை மருத்துவரின் கடைசி ஆசை..! முதல்வர் கூறிய ஆறுதல்…!

தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அரும்பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து மனிதநேயம் மக்களிடையே ஏற்பட்டிருந்தாலும் கொரோனா பற்றிய அச்சம்தான் அதிகமாக உள்ளது.

ஆனால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகளை ஊடகங்கள் தினந்தோறும் வெளியிட்டு வருகின்றன. இப்படி இருக்க, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த (55) உடலை அடக்கம் செய்வதற்காக கடந்த 19ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொரோனவள் உயிரிழந்தவரின் உடலால் தொற்று பரவும் என பயந்து அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸை வழி மறித்ததோடு, மருத்துவ ஊழியர்களை தாக்கி வண்டியை சேதபடுத்தினர்.

சம்பவம் அறிந்து வந்த போலீஸ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும், சடலத்தை அடக்கம் செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து சடலம் அங்கிருந்து கொண்டு சென்று வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் அடுத்து உயிரிழந்த மருத்துவரின் மனைவி ஆனந்தி, தனது கணவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யவேண்டி முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தார். மருத்துவர் சைமன் இறப்பதற்கு முன்பாக தனது உடலை அக்கல்லறையில் அடக்கம் செய்யவேண்டும் என கூறியதற்காகவும் தெரிவித்தார். இன்று முதல்வர் பழனிசாமி மருத்துவரின் மனைவி ஆனந்தியுடன் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...