முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சென்னை: வாடகை பிரச்னை; இன்ஸ்பெக்டர் அடித்தார்! - தீக்குளித்துவிட்டு நடுரோட்டில் ஓடிய பெயின்டர்

சென்னை: வாடகை பிரச்னை; இன்ஸ்பெக்டர் அடித்தார்! – தீக்குளித்துவிட்டு நடுரோட்டில் ஓடிய பெயின்டர்

சென்னை புழல் பாலவிநாயகர் கோயில் தெருவில் குடியிருப்பவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தனர். அதில், ஒரு வீட்டில் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் குடியிருந்தார். இந்தச் சூழ்நிலையில், சீனிவாசன் மீது ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், சீனிவாசன் வீட்டு வாடகை கொடுக்கவில்லை. மேலும் தகராறு செய்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

Representational Image

இதையடுத்து, புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையிலான போலீஸார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். இந்தச் சூழநிலையில் நேற்றிரவு சீனிவாசன், தீக்குளித்தார். உடலில் தீ பிடித்த நிலையில் தெருவில் ஓடி வந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையிலிருந்து சீனிவாசன், பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில் ஹவுஸ் ஓனர், இன்ஸ்பெக்டர் பென்சாம் என்பவரை அழைத்து வந்தார். பிறகு இன்ஸ்பெக்டர் என்னை அடித்தார். வாடகை கொடுக்காதால் வீட்டை காலி பண்ணக் கூறினர் என்று கூறியுள்ளார். அப்போது வீடியோ எடுத்த சீனிவாசனின் உறவினரை போலீஸார் வெளியில் செல்லும்படி கூறுகின்றனர். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது

மகேஷ்குமார் அகர்வால்

சிகிச்சையிலிருந்த சீனிவாசன், இன்று பிற்பகலில் உயிரிழந்தார். இதுகுறித்து புழல் போலீஸார் விசாரண நடத்தினர். சீனிவாசனின் வாக்குமூல வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது. அதன்பேரில், சென்னை போலீஸ் கமமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், புழல் இன்ஸ்பெக்டர் பென்சாமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Also Read: நெல்லை: வழக்கறிஞரின் காலை உடைத்த போலீஸ்! – 3 ஆண்டுகளுக்குப் பின்னர் 8 பேர் மீது வழக்கு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சீனிவாசன், பெயின்டர் வேலை செய்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புழல் பகுதிக்கு வந்து குடும்பத்துடன் வாடகைக்கு இருந்துள்ளார். இவர் மீது கடந்த ஜனவரி மாதம் புழல் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதிலிருந்த ஹவுஸ் ஓனருக்கும் சீனிவாசனுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. ஹவுஸ் ஓனர் மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் சீனிவாசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதுதொடர்பாக ஹவுஸ் ஓனர் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பென்சாம் விசாரணை நடத்த சென்றார். அப்போது, சீனிவாசன் போதையில் இருந்தார். அதனால் அவரிடம் விசாரணை நடத்தாமல் சென்றுவிட்டார். இந்தச் சூழலில்தான் அவர் தீக்குளித்துள்ளார். ஆனால், வாடகை பிரச்னையைக் கூறி பிரச்னையை சீனிவாசன் தரப்பினர் திசை திருப்பிவிட்டனர்” என்றனர்.

இன்ஸ்பெக்டர் பென்சாம்

Also Read: சென்னை: 4 மாத பாக்கி – வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரைக் கொலை செய்த இளைஞர்!

சீனிவாசனின் உறவினர்கள் கூறுகையில், “பெயின்டர் வேலைபார்க்கும் சீனிவாசனுக்கு கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லை. அதனால் அவரால் வாடகை பணம் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து ஹவுஸ் ஓனர் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வரும் நேரத்தில், உடனடியாக எப்படி வீட்டை காலி செய்ய முடியும். அதனால் காலஅவகாசம் கேட்டுள்ளார். ஆனால், ஹவுஸ் ஓனர் போலீஸாரை வீட்டுக்கே அழைத்து வந்து பெண்கள் முன்னிலையில் சீனிவாசனை அடித்துள்ளனர். அந்த மனவேதனையில்தான் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சீனிவாசனின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. சிகிச்சையிலிருந்த சீனிவாசனிடம் என்ன நடந்தது என்பதை கேட்டு அதை வீடியோவாக மருத்துவமனையில் எடுத்தோம். அப்போது, அதை இன்ஸ்பெக்டர் பென்சாம் தடுத்தார். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது” என்றனர்.

ஏற்கெனவே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை புழல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பென்சாம் தன்னை அடித்ததாக பெயின்டர் சீனிவாசன் வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்த சம்பவம் சென்னை போலீஸாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...