முகப்பு சினிமா ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை... கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை… கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

கோடைக்காலத்தின் குளுகுளு சுகங்களில் நுங்கு என்கிற ஐஸ் ஆப்பிளுக்கு முக்கிய இடமுண்டு. தினந்தோறும் சாப்பிட்டாலும் சலிக்காது. அதேபோல் பனங்காய்களைச் சீவி, நுங்கு அடிபடாமல் பதமாக எடுக்கிற லாகவமும் பார்க்கச் சலிக்காது. பனங்காயின் மேலே, கீழே, இரண்டு பக்கவாட்டிலும் என நான்கு சீவு… கத்தியால் நெம்பி நுங்குகளைப் பனையோலையின் மீது தள்ளுவதைப் பார்க்கையிலேயே கண்களும் நாக்கும் குளுமையை உணரும்.

நுங்கு

இளம் நுங்கு, கல் நுங்கு, நுங்குத் தண்ணீர், நுங்கின் தோல் ஆகியவற்றின் மருத்துவப் பலன்கள்… கொரோனா தொற்று இருப்பவர்கள் நுங்கு சாப்பிடலாமா ஆகியவற்றைப் பற்றி இயற்கை மருத்துவர் யோ. தீபா சொல்கிறார். கூடவே, சிம்பிளான, ருசியான நுங்கு ரெசிப்பிகளை சொல்லித் தருகிறார் சமையல்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார். முதலில் மருத்துவர் யோ. தீபா.

“பனை நுங்கில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ், சி ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், பொட்டாசியம் ஆகிய தாது உப்புகள் இருக்கின்றன. வைட்டமின்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வியர்வை காரணமாக நாம் இழக்கிற மினரல்களை சோடியமும் பொட்டாசியமும் ஈடுகட்டும். அதனால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

இயற்கை மருத்துவர் யோ. தீபா

வெயில் காலத்தில் நீர்ச்சத்து இழப்பு காரணமாக நிறைய பேருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுங்கில் இருக்கிற அதிகப்படியான நீர்த்தன்மை நம் உடலின் நீரிழப்பை ஈடுகட்டுகிறது. அதே நேரம் இதில் இருக்கிற பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.

வெயில் காலத்தில் செரிமானப் பிரச்னைகள் அதிகமாக இருக்கும். கூடவே மலச்சிக்கலும்… இந்த சீசனில் பலருக்கும் ஆசன வாயில் எரிச்சல், வலி இருக்கும். இதற்குக் காரணம் உடல் சூடு அதிகமாவதுதான். இதற்கும் நுங்கு நல்ல தீர்வு.

நுங்கு

கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கும். இந்த சீசனில் அது இன்னமும் அதிகரிக்கும். இவர்கள் தினமும் 2 இளம் நுங்கு சாப்பிட்டால் மலச்சிக்கல் அவதியிலிருந்து விடுபடலாம்” என்றவர், கொரோனா தொற்று இருப்பவர்கள் நுங்கு சாப்பிடலாமா என்பது பற்றியும் சொன்னார்.

“கொரோனா தொற்று ஏற்பட்டு க்வாரன்ட்டீனில் இருந்து வந்தவர்களும், சளி, மூச்சிரைப்பு போன்ற பிரச்னை இருப்பவர்களும் நுங்கு சாப்பிடாமல் இருப்பதே பாதுகாப்பு.

நுங்கின் தோல் வெயிலால் வருகிற சருமப் பிரச்னைகளைச் சரி செய்யும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு வேளை 4 அல்லது 5 நுங்கு மட்டும் சாப்பிட்டு டயட் இருக்கலாம்.

இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருப்பவர்கள் நுங்கைத் தோலுடன் சாப்பிட வேண்டும். ஆனால், தற்போது கொரோனா தொற்றுக்குக் கைகளால் தொடுதல் முக்கியமான காரணமாக இருப்பதால், நுங்கை கல் உப்பு கலந்த தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவிச் சாப்பிடுங்கள்.

சிலர் நன்கு முற்றிய நுங்கை விரும்பிச் சாப்பிடுவார்கள். தப்பில்லை. தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், அதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், நான்கு அல்லது ஐந்துக்கு மேல் சாப்பிட்டால் வயிற்றைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கும். விளைவு வயிற்றுவலி, மலம் கழித்துக்கொண்டே இருப்பது போன்ற கஷ்டங்கள் வரலாம்.

நுங்கு

Also Read: நுங்கு நாள்கள்! – வாசகர் பகிர்வு #MyVikatan

வெள்ளை நிறத்தில் இருக்கிற உணவு, காய்கறி மற்றும் பழங்களில் எல்லாமே Anthocyanin எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கும். நுங்கில் இது அதிகம். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு இது பெஸ்ட் மருந்து என்றே சொல்லலாம்.”

ஜல்ஜீரா நுங்கு

ஜல்ஜீரா நுங்கு

நான்கு நுங்குகளைப் பொடியாக கட் பண்ணவும். ஒரு நுங்கை தேவையான அளவு பனைவெல்லத்துடன் சேர்த்து அரைக்கவும். இரண்டையும் ஒன்று சேர்த்து, மேலே வறுத்துப் பொடி செய்த சீரகத்தூள் அரை டீஸ்பூன், ஒரு சிட்டிகை உப்பு, சில துளிகள் எலுமிச்சைச்சாறு சேர்த்து அருந்தவும்.

நுங்கு சாலட்

சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார்

நுங்கில் தோலை எடுத்துவிட்டு, லேசாக உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் தூவி, விருப்பப்பட்டால் தேன் விட்டு அப்படியே சாப்பிடலாம்.

நுங்கு பொடி சாதம் 

ஒரு கப் அரிசியை வேக வைத்து வடிக்கவும். ஒரு வெங்காயத்தை நறுக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, தனியா ஒரு டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், தேவையான அளவு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கவும். இதனுடன் முற்றிய நுங்குத் துண்டுகள், பொடித்த தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு புரட்டி, சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

கல் நுங்கு பஜ்ஜி

கல் நுங்கு பஜ்ஜி

முற்றிய நுங்கை இரண்டாக அல்லது நான்காக கட் பண்ணிக் கொள்ளவும். இதை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வெயிலையும் நுங்கையும் கொண்டாடுவோம்!

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.