முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஜாம் மாவை பின்னுக்குத் தள்ளிய நம்பர் ஒன்னாக உருவெடுத்த முகேஷ் அம்பானி!!

ஜாம் மாவை பின்னுக்குத் தள்ளிய நம்பர் ஒன்னாக உருவெடுத்த முகேஷ் அம்பானி!!

நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஜியோ நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்கியது அடுத்து ஆசியாவிலேயே நம்பர் பணக்காரராக மீண்டும் உருவெடுத்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,574 கோடி அளவிற்கான பங்குகளை வாங்கியது. அதாவது 10% பங்குகளை வாங்கியது. இதையடுத்து முகேஷ் அமபானியின் சொத்து மதிப்பு 49.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதையடுத்து இதுவரை ஆசியாவில் நம்பர் பணக்காரராக இருந்த சீனாவின் தொழிலதிபர் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார். தற்போது முகேஷ் அம்பானியை விட ஜாக் மாவின் சொத்து மதிப்பு 3.2 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. இந்த தகவலை புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

முகேஷ் அம்பானியும், மார்க் ஜுக்கர்பெர்க்கும் இணைந்து இருப்பது வர்த்தக உலகில் அவர்களது மதிப்பை உயர்த்தியுள்ளது. இவர்களது வர்த்தகத்தின் மூலம் டிஜிட்டல் ஆப், வயர்லெஸ் தொடர்புகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது இவர்களது கணிப்பாக இருக்கிறது.

முகேஷ் அம்பானியின் ஆயில் நிறுவனத்தின் மதிப்பு கடந்த புதன்கிழமை 14 பில்லியன் டாலருக்கு இறங்கியுள்ளது. இதற்குக் காரணம் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்து இதன் பங்குகளின் மதிப்பு குறைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்துக்கு 100 மாஸ்க்குகளை வழங்கி இருக்கும் , கடந்த செவ்வாய் கிழமை மட்டும் 1 பில்லியன் டாலர் அளவிற்கு தனது சொத்து மதிப்பில் இழந்துள்ளார்.

ஜியோவும், ஃபேஸ்புக் நிறுவனமும் கைகோர்த்து இருப்பதன் மூலம், இந்தியாவில் எதிர்காலத்தில் மேலும் தனது பங்களிப்பை மார்க் ஜூக்கர்பெக்கால் அளிக்க முடியும் என்று முமேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களும், 400 மில்லியன் வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவர்கள் எதிர்காலத்தில் ஆன் லைன் வர்த்தக சேவைகளுக்கு ஜியோவை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையை இவர்கள் கொண்டுள்ளனர். இந்த இணைப்பில் இருப்பவர்கள் தங்களது நெட்வொர்க் சேவையை ஜியோவுக்கு மாற்றலாம் என்ற எண்ணமும் எழுந்துள்ளது.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...