முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் "டிவி பாக்காத" என தாய் திட்டியதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

“டிவி பாக்காத” என தாய் திட்டியதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு கருப்பசாமி நகர் மீனா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் குமரகுருபரன். வயது 41. இவருக்கு அனுஷ்கா என்ற 10 வயதாகும் மகள் ஒருவர் உள்ளார்.

அனுஷ்கா உப்பிலிபாளையத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அனுஷ்கா வீட்டிலிருந்து வந்திருக்கிறார்.

வீட்டில் நேரத்தைக் கழிக்க அனுஷ்கா தனது அதிக நேரத்தை டிவி பார்ப்பதில் செலவிட்டுள்ளார். இதனால் வீட்டு வேலைகளில் தனக்கு எந்த உதவியும் செய்யாமல் எப்போதும் டிவி பாக்கிறாய் என அனுஷ்காவின் கோபமடைந்து பலமுறை கண்டிருக்கிறார்.

அம்மா தொடர்ந்து தன்னை திட்டியதால் மனவேதனை அடைந்த அனுஷ்கா கழிவறைக்குச் சென்று கதவு கைப்பிடியில் டவளை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கழிவறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவருடைய தாய் அங்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்குத் தனது குழந்தை தூக்கில் தொங்கிய நிலையில் அசைவற்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இதுகுறித்து உடனடியாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...