முகப்பு சினிமா `தண்ணீர், கெமிக்கல் ப்ளஸ் சோப் ஆயில்!' -பிரபல கம்பெனிகளுக்கு ஷாக் கொடுத்த போலி கிருமிநாசினி ஆலை

`தண்ணீர், கெமிக்கல் ப்ளஸ் சோப் ஆயில்!’ -பிரபல கம்பெனிகளுக்கு ஷாக் கொடுத்த போலி கிருமிநாசினி ஆலை

கொரோனா வைரஸைத் தடுக்க கிருமி நாசினிகளை வழக்கத்தைவிட அதிகமாக பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர். அதனால் பிரபலமான கிருமி நாசினிகளின் தேவை அதிகரித்தது. அதனால் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் கூடுதல் உற்பத்திகள் மூலம் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்துவந்தன. ஆனால், சென்னையில் மட்டும் கிருமி நாசினிகளுக்கான ஆர்டர்கள் குறிப்பிடும் வகையில் இல்லை. அதனால் சந்தேகமடைந்த பிரபலமான கிருமி நாசினிகளின் கம்பெனி தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடைகளில் தங்களின் கிருமி நாசினிப் பொருள்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்தக் கம்பெனி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், தங்களின் தயாரிப்பைப் போலவே போலி கிருமிநாசினிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகள்

Also Read: சந்தையில் குவியும் போலி ஷாவ்மி தயாரிப்புகள்… ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி?

இதையடுத்து, சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில் சம்பந்தப்பட்ட கிருமி நாசினிகளின் கம்பெனி தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அந்தப் பிரிவின் ஏ.டி.ஜி.பி ஷகில் அக்தர் அறிவுரைப்படி எஸ்.பி ராமர் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், சலைஸ்மேரி, ராஜகோபால் தலைமைக் காவலர்கள் சிவகாமி, பிச்சமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார், போலி கிருமி நாசினிகளை விற்பனை செய்யும் கும்பல் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரித்தனர். அப்போது, சென்னை ராயப்பேட்டையில் போலி கிருமி நாசினியின் அலுவலகம் செயல்படுவதைக் கண்டறிந்தனர். அங்கு சென்றபோது அலுவலகப் பொறுப்பாளராக இருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த துளசி நாதுசிங் (25) என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலைக் கேட்டு போலீஸாரும் சம்பந்தப்பட்ட கிருமி நாசினி தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஓரிஜினல் பெயரில் போலி கிருமிநாசினி

துளசி நாதுசிங் அளித்த தகவலின்படி சென்னை செங்குன்றம் வடபெரும்பாக்கத்தில் செயல்பட்ட போலி கம்பெனிக்கு போலீஸார் சென்று ஆய்வு நடத்தினர். அந்தக் கம்பெனியை பொறுப்பாக கவனித்து வந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரானா (29) என்பவரை போலீஸார் பிடித்தனர்.

அந்தக் கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த ட்ரம்களில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தன. மேலும், ஒரு வாளியில் சோப் ஆயில் கலவையும் இன்னொரு வாளியில் கெமிக்கலும் இருந்தன. அந்தக் கெமிக்கல் மூலம் விரும்பும் நிறத்தைக் கொண்டு வரலாம். பிரபலமான கிருமி நாசினிகளின் பெயரிலான ஸ்டிக்கர்களும் இருந்தன. அவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதோடு துளசி நாதுசிங், ராஜேஷ் ரானா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “ தண்ணீர், கெமிக்கல், சோப் ஆயில் ஆகியவற்றைக் கொண்டு பிரபலமான கிருமி நாசினிகளின் தயாரிப்பு பொருள்களை போலியாக இந்தக் கம்பெனியில் தயாரித்துவந்துள்ளனர். குறிப்பாக டெட்டால், லைசால், விம் ஜெல், ஹார்பிக் ஆகியவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இந்தக் கம்பெனியை குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ் படேல் என்பவர் நடத்திவந்துள்ளார். ஊரடங்கு காரணமாக அவர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரின் ஐடியா அடிப்படையில்தான் போலி கிருமிநாசினிகள் தயாரிக்கப்பட்டுவந்துள்ளன.

Also Read: `ஃபேஸ்புக் லைவ்; ரவுண்ட் கட்டப்பட்ட சென்னை ரௌடி’ – ஒரே இரவில் நடந்த 2 அதிர்ச்சி சம்பவங்கள்

போலி லைசால்

கொரோனா காரணமாக இந்தப் போலி தயாரிப்புகள் அதிகளவில் விற்கப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு ஒரிஜினல் போலவே இருப்பதால் வாடிக்கையாளர்களாலும் கடைக்காரர்களாலும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும்பாலும் இந்தப் போலி கம்பெனியிலிருந்து ஆன்லைனில் மொத்தமாக ஐடி நிறுவனங்கள், பெரிய கம்பெனிகள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளன. ஆர்டர்களை எடுக்கவும் தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போலி கம்பெனியிடமிருந்து 4,00,000 ரூபாய் மதிப்பிலான போலி கிருமி நாசினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

`கிருமி நாசினிகளை வாங்கும் பொதுமக்கள் இனிமேல் உஷாராக இருக்க வேண்டும்’ என்று போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...