முகப்பு சினிமா `தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’- உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

`தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’- உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 37,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சில மாநிலங்களில் முதல்வர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும்கூட களப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தொடர்ந்து பரிசோதனைகளைச் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது அவர் ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே நான் பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனை முடிவு அறிக்கையின்படி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனது உடல்நிலை சீராக உள்ளது. எனினும், மருத்துவர்களின் ஆலோசனையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: உ.பி : `தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் கொரோனாவுக்கு பலி!’ – முதல்வர் இரங்கல்

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...