முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் தனுஷ் - கார்த்திக் நரேன் படம் எந்த நிலையில் இருக்கு?

தனுஷ் – கார்த்திக் நரேன் படம் எந்த நிலையில் இருக்கு?

தனுஷ் – கார்த்திக் நரேன் முதன் முறையாக இணையும் படம் D43. தனுஷின் 43வது படமான இது கர்ணன் படத்தைத் தொடர்ந்து தமிழில் அவர் நடிக்கும் படமாகும். கார்த்திக் நரேன் கடந்த 10 நாட்களாக செய்து வந்த இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் கிட்டத்தட்ட முழுமையாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட சென்னை, அசுரன் படங்களுக்குப் பிறகு தமிழில் தனுஷின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயர்ந்துவிட்டது. இந்த வருடத்தின் துவக்கத்திலேயே தனுஷ் நடிப்பில் பட்டாஸ் எனும் படம் வெளியானது. எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாவிட்டாலும், படம் தோல்வி அடையவும் இல்லை. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்தார் தனுஷ்.

அடுத்து மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. மார்ச்சில் முழுமையடையும் என கூறப்பட்ட படத்தின் ஷூட்டிங் கொரோனா வைரஸ் பரவலால் தடை பட்டுள்ளது. எனினும் 90 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், தனுஷின் காட்சிகளும் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இந்தியில் நடிக்க தனுஷ் கிளம்பியிருந்தார். கொரோனா பரவலால் அங்கும் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்திக் நரேனுன் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல கார்த்திக் நரேன், படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டாராம்.

வரதன் மற்றும் வைரஸ் பட புகழ் ஷார்ஃபு மற்றும் சுஹாஸ் இருவரும், கார்த்திக் நரேனுடன் இந்த படத்தின் பணிபுரிகிறார்கள். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். படத்தை தயாரிப்பது சத்யஜோதி ஃபிலிம்ஸ்

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...