முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு: தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் ரமலான் மாதம் நாளை தொடங்குகிறது என தலைமை காஜி சலாவுதீன் அயூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாகக் கருதப்படும் ரமலான் மாதத்தில், ஆண்டு தோறும் பிறை கண்டு நோன்பு தொடங்குவது வழக்கம். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாதத்தில் ஒரு மாத காலம் நோன்பிருந்து முடிவில் கொண்டாடப்படும்.

சவுதி அரேபியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பிறை தெரிந்ததால் இன்றே ரமலான் தொடங்கி விட்டது. வழக்கமாக ரமலான் மாதத்தை இஸ்லாமிய நாடுகள் கொண்டாடி வரவேற்று மகிழும். ஆனால் இந்த ஆண்டு தாக்கம் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு களையிழந்து காணப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை நாளை (சனிக்கிழமை) முதல் ரமலான் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் ரமலான் மாதம் நாளை தொடங்குகிறது என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் அயூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, ரமலான் மாதத்தின் முதல் நோன்பு இஸ்லாமியர்களால் நாளை கடைபிடிக்கப்படுகிறது.

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மசூதிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படுவதாகவும், வீட்டிலிருந்தே தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...