முகப்பு சினிமா `தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று!’ -சுகாதாரத்துறை #NowAtVikatan

`தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று!’ -சுகாதாரத்துறை #NowAtVikatan

மேலும் 33 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறையின் அறிவிப்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் – 1,629 பேர்.

குணமடைந்தோர் – 662

மருத்துவமனையில் இருப்போர் – 946

மானுடத்தின் மறு உருவாக்கம்!

மானுடத்தின் மறு உருவாக்கம்…

இந்த வார ஆனந்தவிகடனில்

Art by Hasif Khan

#SaveDoctors #Corona #hasiftoon #AVcartoon #AnandaVikatan #SubmitYourAVcaption

Posted by Ananda Vikatan on Tuesday, April 21, 2020

மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை!

கொரோனா தடுப்புப் பணியில் முன்னின்று போராடுபவர்கள் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள். நாட்டில் சில பகுதிகளில் மருத்துவர்கள் மீதும் சுகாதாரப் பணியாளர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் மருத்துவர்களைக் காக்க, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார். மேலும் மருத்துவர்கள் மீதான வன்முறை எந்த வகையில் இருந்தாலும் அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்தக் குற்றத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடையாது எனவும் 30 நாள்களில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்த அவர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்றார்.

ரூ.50 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்புப் பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உட்பட அனைத்துத் துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரசு வழங்கும் அரிசியை மக்களுக்கு வழங்க கோரிக்கை!

மாவட்ட ஆட்சியருடன் ஜமாத் நிர்வாகிகள்

தற்போது கொரானோ தாக்கத்தின் விளைவாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயார் செய்ய வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக அந்தந்த பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் பச்சரிசியை ஜமாத் நிர்வாகிகள் பெற்று அதை அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கு நேரில் விநியோகிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஆலோசனை நடத்திய ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினர், பச்சரிசியை வீடுகளுக்குப் பிரித்து வழங்குவதன் மூலம் வீடுகளில் நோன்புக் கஞ்சி தயார் செய்ய இயலாது. அரிசி மட்டுமே அரசு வழங்கி வரும் நிலையில் நோன்புக் கஞ்சிக்குத் தேவையான மற்ற துணைப் பொருள்கள் இல்லாமல் வீடுகளில் கஞ்சி தயார் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டு நோன்புக் கஞ்சிக்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 417 டன் பச்சரிசியை அனைத்து முஸ்லிம் ஜமாத்துகள் சார்பில், ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கிடும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர். கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்துக்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என்றும், அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரான சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது..!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 18,985-லிருந்து 19,984 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 603-லிருந்து 640ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260-லிருந்து 3,870 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 5,218 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 722 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.77 லட்சத்தைக் கடந்துள்ளது.

8 லட்சம் பாதிப்பு; 45,000-ஐ நெருங்கும் இறப்பு! #Corona

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், இந்த வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-ஐ நெருங்கியுள்ளது. திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய் கிழமை இரவு வரை மட்டும் அங்கு 40,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Must Read

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...

`கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ – சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள சீனா தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம்...

8 வீடுகள் அப்படியே கடலுக்குகள் சென்றது: கடல் நீர் உள்ளே வந்தது சுணாமியை போல

நோர்வே நாட்டில் வட பகுதியில் உள்ள அல்டா என்னும் இடத்தில், பெரும் நிலப்பரப்பு ஒன்று கடலுக்குள் சென்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது சுணாமி போன்று கடல், கரையை நோக்கி பெருக்கெடுத்து...

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள 33 முதல் 100 சதவீதம் வரை பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பணியிடங்களில்...