முகப்பு சினிமா ’தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan

’தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #NowAtVikatan

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு

ஏப்ரல் 30-ம் தேதியுடன் பணி ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அடுத்த 2 மாதங்கள் பணி நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவர் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை!

சென்னையில் கொரோனா தொற்றால் பலியான மருத்துவரின் உடல், பொதுமக்களின் எதிர்ப்பால், அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மனைவி, தனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவர் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி அது பாதுகாப்பானது இல்லை என்பதால் அவரது மனைவியின் கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 6,817பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனவால் பலியானவர்களின் எண்ணிக்கை 723 இல் இருந்து 775 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் பலியானவர்களின் எண்ணிக்கை 300 -ஐ கடந்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,063 ஆக உள்ளதாக என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா…!

கொரோனா

உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்டு வரும் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருப்பது அனைத்து தரப்பு மக்களையும் கவலை கொள்ள செய்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,28,617 ஆக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை 1,97,091 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 9,25,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,185 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக இருக்கிறது!

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...