முகப்பு சினிமா தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்; மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது! #NowAtVikatan

தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்; மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது! #NowAtVikatan

தமிழகத்தில் 759 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்திருக்கிறது. சென்னையில் மட்டும் இன்று 625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் 363 பேர் குணமடைந்துள்ளனர்; இதுவரை 7,491 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 103 ஆக உயர்ந்திருக்கிறது.

ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன்!

ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை சென்னையில் கைது செய்யப்பட்டார். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆர்.எஸ் பாரதி

கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை நிறைவு செய்து, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆர்.எஸ்.பாரதியை ஆஜர்படுத்தினர். இதனிடையே ஆர்.எஸ்.பாரதியை ஜாமீனில் விடுவிக்க தி.மு.க வழக்கறிஞர் அணி நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் மாதம் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் பேசியது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இந்த இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 6,654 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,720 ஆக உள்ளது.

சலூன் கடைகளுக்கு கூடுதல் தளர்வு!

சலூன்

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக ஊரகப் பகுதிகளில் மட்டுமே சலூன் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...