முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் தலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வைக்கும் அரசியல் பார்வை!

தலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் – பா.ரஞ்சித் முன்வைக்கும் அரசியல் பார்வை!

திமுகவை சேர்ந்த சட்டத்துறை செயலர் ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியின் இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். தமிழகத்தை பொறுத்தவரை தலித்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

ஆனால் வாக்கு வங்கி அரசியலை தவிர்த்து தலித்கள் மீதான வன்கொடுமைக்கு தீர்வு என்ற விஷயத்தில் கட்சிகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியதாகவே இருக்கின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றன. தலித் மக்களின் பாதுகாவலர்கள் என்று அரசியல் கட்சிகள் தங்களை அறிவித்துக் கொண்டாலும் அந்த மக்கள் மீதான வன்கொடுமைகள் மட்டும் முடிவுக்கு வந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

கொரோனா மற்றும் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலிலும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சாதி வன்கொடுமைகள் நடந்துள்ளன. இவற்றை களைவதற்கு ஆளும்கட்சி சார்பில் சீராய்வு கூட்டங்கள் நடத்தி தீர்வு காணவில்லை என்று புகார்கள் எழுகின்றன. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் திமுக மற்றும் அதிமுகவை பலவீனப்படுத்தாமல் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று பாஜக நன்றாக தெரிந்து வைத்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அதிமுகவை தனது பிடிக்குள் வைத்துக் கொண்டு பாஜக ஆட்டிப் படைப்பதாய் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எனவே திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியாக தான் ஆர்.எஸ்.பாரதியின் கைது அமைந்திருப்பதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் சாதி அரசியல் விளையாட்டிற்கு தமிழக அரசு இணங்கிப் போகும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டரில் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1 – தலித் மக்களுக்கான மாநில ஆணையம் state commission இன்னும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. அதனை உடனடியாக அமைக்க முதலமைச்சர் பழனிசாமி முன்வருவாரா? கூட்டணி கட்சியான பாஜக இதனை வலியுறுத்துமா?

2 – ஆண்டுக்கு 2 முறை முதல்வர் தலைமையில் நடைபெற வேண்டிய ‘விழிகண்’ கூட்டம் 3 ஆண்டுகளாக நடைபெறவில்லையே; கூட்டணி கட்சியான பாஜக ஏனென்று விளக்கம் கேட்குமா? உடனடியாக நடத்தச்சொல்லி முதல்வரை வலியுறுத்துமா?

3 – தலித்துகளுக்கான துணைத்திட்டத்தை Sub_plan நடைமுறைப்படுத்துவதற்கென தமிழக அரசு சட்டம் legislation இயற்றவில்லையே; கூட்டணி கட்சியான பாஜக, ஏனென்று விளக்கம் கோருமா?அவ்வாறு சட்டம் இயற்றும்படி முதல்வரிடம் வலியுறுத்துமா?

4 – தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசியகுற்ற ஆவண மையம் National Crimes Record அறிவித்துள்ளது. சாதிவெறியர்களால் ஆணவக்கொலைகளும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து கூட்டணி கட்சியான பாஜக, தமிழக முதல்வரிடம் விளக்கம் கேட்குமா?

5 – தலித் ஊராட்சித் தலைவர்களை நாற்காலிகளில் அமரவிடாமல் தடுப்பதாக 3 இடங்களில் வழக்குப் பதிவாகியுள்ளதே; இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாஜக வலியுத்துமா?அந்த சாதிவெறியர்களை வெளிப்படையாக கண்டிக்குமா? தலித் தலைவர்களை நாற்காலியில் அமர வைக்குமா?

6 – பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் செய்ய toll free number உள்ளதே; அதுபோல தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக புகார்செய்ய toll free number வழங்க, கூட்டணி கட்சியான பாஜக தமிழக அரசை வற்புறுத்துமா?

7 – தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் அண்மையில் ஒரு பழங்குடி சிறுவனை tribal_boy என அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்னாரே; அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி கைதுசெய்ய வேண்டுமென கூட்டணி கட்சியான பாஜக, தமிழக முதல்வரிடம் வலியுறுத்துமா?

8 – சகோதரர் முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா?

9 – தனது இறுதி மூச்சுவரை சாதியத்தை/ இந்துத்துவத்தை/ சனாதனத்தை/ மூர்க்கமாக எதிர்த்த முரட்டுப் போராளி புரட்சியாளர் அம்பேத்கர். எதிர்ப்பின் உச்சமாக இந்து மதத்தைவிட்டு பல இலட்சம் பேரோடு வெளியேறியவர். அவரை எதிர்க்கத்தானே வேண்டும்? ஆதரிப்பது ஏன்? பாஜக விளக்குமா?

10 – சாதி ஒழிப்புக்காக 10 இலட்சம் பேருடன் ஒரேநாளில் பௌத்தம் தழுவி இந்துமதத்தை ஆட்டம் காண வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவரளவுக்கு இந்துமதத்தின் மீது தாக்குதல் தொடுத்தவர் யார்? கடவுள் அவதாரங்களைத் தோலுரித்தவர் யார்? அப்படிபட்ட அம்பேத்கர் உங்களுக்கு எதிரியா இல்லையா?

என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்து பாஜகவை திணறடித்துள்ளார். இந்த சூழலில் தான் தலித் சர்ச்சை தொடர்பாக ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதாவது, அதிகாரத்தின் விளையாட்டை தேவையின் பொருட்டு ஆளுக்கொரு முறையாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டக்காரர்களுக்கு தெரிந்தே இருக்கிறது பலி கொடுக்கப்பட வேண்டிய ஆடுகளின் குரல்களை.

விடுதலையின் சுவை அறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம் !! ஆகா என்ன சுவை. இக்கருத்தை அண்ணன் திருமாவுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை விட்டு விட்டு, எல்லா அரசியல் கட்சிகளும் தலித் மக்களை எப்படி அதிகாரத்திற்காக கையாளுகிறார்கள் என்கிற உண்மையை உணருங்கள். ஆடுகள்: தலித் மக்கள், புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது திரைப்படங்கள் மூலம் பற்றிய கருத்துகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருபவர் பா.ரஞ்சித். இவரது தற்போதைய கருத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் லாபத்திற்காக தலித் மக்களை எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அரசியல் கட்சிகளின் ஏமாற்று வேலைகளுக்கு பலியாகிவிடாமல் தலித் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதாய் கருத்து தெரிவித்துள்ளார்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...