முகப்பு சினிமா தாயன்புடன் போலீஸாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய பெண்... சர்ப்ரைஸ் கொடுத்த ஆந்திர டிஎஸ்பி!

தாயன்புடன் போலீஸாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய பெண்… சர்ப்ரைஸ் கொடுத்த ஆந்திர டிஎஸ்பி!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், துனி என்ற நகரத்திலுள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றிவருபவர், லோகமணி. இரண்டு நாள்களுக்கு முன், அவருக்கு சம்பளம் கிடைத்துள்ளது. சம்பளம் ரூ 3,500 மட்டும்தான். கோடை வெயில் காரணமாக, தன் குடும்பத்தினர் குடிப்பதற்காக இரண்டு கூல்டிரிங்ஸ் கேன்களை வாங்கிக்கொண்டு லோகமணி வீட்டுக்குச் செல்லும்போது,

கொரோனா லாக்டௌன்

சாலையருகில் கொரோனா லாக்டௌன் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், ’பையில் என்ன வைத்துள்ளீர்கள்’ என்று லோகமணியிடம் கேட்டுள்ளனர். பையில் கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் இருப்பதாக லோகமணி பதிலளித்ததோடு , தன் பையில் இருந்த கூல்டிரிங்ஸ் கேன்களை எடுத்து, ‘வெயிலில் நீங்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்… தயவுசெய்து இதைக் குடியுங்கள்’ என்று தாயன்போடு போலீஸாருக்குக் கொடுத்துள்ளார். இதனால் நெகிழ்ந்துபோன போலீஸார், தாங்கள் வைத்திருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்களில் இரண்டை எடுத்து லோகமணியிடம் கொடுத்து, ‘உங்கள் குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுங்கள்’ என்று கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

குறைந்த வருமானம் கொண்ட நிலையிலும், வெயிலில் வாடும் போலீஸாருக்கு தான் வைத்திருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்களை லோகமணி கொடுத்தது குறித்த செய்தி ஆந்திரா முழுவதும் பரவியது. ஆந்திர போலீஸ் டிஜிபி கௌதம் சோவாங், லோகமணியைக் கண்டுபிடித்து, ‘துனி’ போலீஸ் நிலையம் அழைத்து வர உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட லோகமணியிடத்தில் ஆந்திர மாநில டிஜிபி, வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக உரையாடினார். ‘போலீஸாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கி உங்கள் தாயன்பைக் காட்டினீர்கள். இந்த அன்புக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களைப் போன்றவர்களால்தான் போலீஸாரால் மக்கள் பாதுகாப்புக்காக இரவு பகலாகப் பாடுபட முடிகிறது. உங்களுக்கு தனிப்பட்ட முறையிலும் எனது நன்றியை சல்யூட் அடித்துத் தெரிவித்துக்கொள்கிறேன் ‘ என்று கூறினார். போலீஸ் அதிகாரி காட்டிய கனிவால், லோகமணி மனம் நெகிழ்ந்து போனார்.

போலீசாருக்கு திருமண விருந்து

எந்தச் செயலுக்கும் எதிர்வினை நிகழும் என்று சொல்வார்கள். அதேபோல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கூல்டிரிங்ஸ் பாட்டில்களை வழங்கிய லோகமணியின் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி , பருப்பு, காய்கறிகள் போலீஸார் தரப்பில் அன்புடன் வழங்கப்பட்டன.

Also Read: மே 4 முதல் சென்னையில் பேருந்து சேவை?! -பயணிகள், ஊழியர்களுக்கு கட்டுப்பாடு விதித்த போக்குவரத்துக் கழகம் #NowAtVikatan

ஆந்திர ஐ.டி துறை அமைச்சர் கே.டி ராமராவ், ‘எனக்கு இந்தப் பெண்மணியை யாரென்று தெரியாது. ஆனால், அந்தப் பெண்மணியின் அழகான பெருந்தன்மை மிக்க மனம் என்னை நெகிழச் செய்துவிட்டது’ என்று ட்விட்டர் தளத்தில் இந்த நிகழ்வு குறித்து குறிப்பிட்டிருந்தார். இதேபோல, கேரள மாநிலத்தில் புதியதாக திருமணம் முடித்த தம்பதி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு போலீஸ் நிலையத்துக்கே சென்று விருந்து அளித்து, தங்கள் கையால் உணவு பரிமாறி அன்பைப் பகிர்ந்துகொண்ட சம்பவமும் நடந்துள்ளது. மேலும், இந்தத் தம்பதி போலீஸார் கையால் 100 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...