முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் திமுக ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்!

திமுக ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்!

அமைப்புச் செயலாளர் இன்று அதிகாலை அவரது வீட்டில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டையில் திமுக இளைஞரணி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தலித் மக்கள் கூட இன்று நீதிபதியாக முடியும் என்பது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை” என்றார். மேலும் பத்திரிக்கையாளர்களையும் அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்.

அப்போதே இந்தப் பேச்சு பெரும் விமர்சனங்களைக் கிளப்பியது. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று திடீரென அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்குச் சென்ற மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப் பிரிவு போலீஸார், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் சென்னை எழும்பூர் நீதிமன்ற செல்வகுமார் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். நீதிபதியின் வீட்டில் ஆர்.எஸ்.பாரதியை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிர் என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் வாதிட்டனர்.

அப்போது ஜுன் 1ஆம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக ஆர்.எஸ்.பாரதியின் கைதை கண்டித்து திமுகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.பாரதியை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...