முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் தியேட்டர்கள் ரெட் கார்டு சர்ச்சை: சூர்யாவுக்கு ஆதரவாக தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

தியேட்டர்கள் ரெட் கார்டு சர்ச்சை: சூர்யாவுக்கு ஆதரவாக தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

நடிகர் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் என்ற படத்தினை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு பதிலாக நேரடியாக தளமான அமேசான் ப்ரைமில் வெளியிட உள்ளனர். தற்போது உரிமைகள் விற்கப்பட்டு விட்ட நிலையில் மே மாதத்தில் அந்த படம் அந்த தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படி நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இப்படி செய்தால் இனி சூர்யாவின் சம்மந்தப்பட்ட எந்த படங்களையும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம், அவர் OTTயிலேயே ரிலீஸ் செய்து கொள்ளட்டும்” என தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் கூறியிருந்தார்.

இதனால் சூர்யாவின் அடுத்த படமான சூரரை போற்று ரிலீசுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது. ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட சூரரை போற்று கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின வாரத்தில் ரிலீஸ் ஆகும் என வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தான் இப்படி ஒரு ரெட் கார்டு வரும் அளவுக்கான சர்ச்சையில் சூர்யா சிக்கியுள்ளார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #அன்புள்ளசூர்யா என்கிற டேக்கை அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது வரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ட்விட்களை அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு சூர்யா செய்த பல நல்ல விஷயங்களை குறிப்பிட்டு அவர்கள் ட்விட் செய்து வருகின்றனர்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...