முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் திருமா: "வரியை ரத்து செய், டாக்டர் உயிரைக் காப்பாற்று அரசே"

திருமா: “வரியை ரத்து செய், டாக்டர் உயிரைக் காப்பாற்று அரசே”

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு திங்கட்கிழமை முதல் தளர்த்திக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அறிக்கையில் ஏப்ரல் 20 முதல் சுங்கச்சாவடிகள் செயல்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளதாவது:
மே மாதம் 3 ஆம் தேதிவரை பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில் அத்தியாவசிய பண்டங்களை ஏற்றிவரும் சரக்கு வண்டிகள் மட்டுமே இப்போது இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இன்று முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி-வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கே வழிவகுக்கும். எனவே, சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்வதுடன், மே 3 ஆம் தேதி வரையில் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி வசூலை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கொரோனா தொற்று என்பது ‘தேசிய பேரிடராக’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்; கை கழுவுவதற்குக் கிருமிநாசினியை (சானிடைசர்) பயன்படுத்த வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஏழை எளிய மக்களும்கூட இப்போது முகக்கவும் அணியவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதுபோலவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு ‘ பிபிஇ கிட்’ டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்பட வேண்டியுள்ளது.

இச்சூழலில், இத்தகைய அத்தியாவசியமான உயிர்காக்கும் கருவிகள் மீது மத்திய அரசு பல்வேறு சதவீதங்களில் ஜிஎஸ்டி வரியை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது, மாஸ்க்குகளுக்கு 5% சானிடைசர்களுக்கு 18% வெண்டிலேட்டர்களுக்கு 12% பிபிஇ கருவிகளுக்கு 12% என ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் உயிர்காக்கும் இக்கருவிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்துசெய்வதுடன், குறைந்த விலையில் இவற்றைப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
உயிர்காக்கும் கருவிகளிலும் வரி வசூலிப்பது என்பது எந்தவொரு மக்கள் நல அரசும் செய்யக்கூடிய காரியம் அல்ல என்பதையும் பிரதமர் மோடி அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரும் ஆளாகி வருவதாகவும் சிலர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மருத்துவர்களுக்கும், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும் போதுமான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படாததையே இது காட்டுகிறது.

எனவே, தமிழகமெங்கும் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு போதுமான அளவில் பாதுகாப்புக் கவச உடைகள் (பிபிஇ கிட்) உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தங்களது பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மருத்துவர் சங்கம் ஏப்ரல் 23-ம் தேதியைக் கறுப்பு தினமாக அறிவித்துள்ளது. அவர்களது அறப்போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவிப்பதுடன், அவர்களின் கோரிக்கைகள் வெற்றிபெற எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...