முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் துக்க நிகழ்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமை!

துக்க நிகழ்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கொடுமை!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலப்பாளையத்தில் நடந்த ஒரு துக்க நிகழ்விற்கு அனுமதியின்றி வந்த கடைநல்லூரைச் சேர்ந்த 8 பேர் ஊருக்கு திரும்பிச் செல்லும்போது ஆலங்குளம் அருகே காவல்துறையினரிடம் பிடிபட்டனர். அவர்களை அத்தியூத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்க முயற்சித்தபோது அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலப்பாளையத்தை சேர்ந்த மதினா என்ற பெண் உயிரிழந்தார் (இயற்கை மரணம்). இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள் மாவட்டம் கடையநல்லூரில் இருந்து எந்தவித அனுமதியும் பெறாமல் ஒரு வேனில் 6 ஆண்கள் இரண்டு பெண்கள் என மொத்தம் 8 பேர் மேலப்பாளையத்துக்கு வந்துள்ளனர்.

துக்க நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தபோது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியூத்தில் சோதனைச்சாவடியில் வாகனைத்தை மறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் மேலப்பாளையம் சென்று வந்ததைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு காவல்துறை தகவல் தெரிவித்த பிறகு அங்கு விரைந்து வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்கள் 8 பேரையும் தனிமைப்படுத்த வேண்டும் என கூறி அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் அனுமதி பெற்று அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அத்தியூத்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அக்கல்லூரி முன் திரண்டு அந்த 8 பேரையும் அங்கு தனிமைப்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் .
இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை அதிகாரிகளிடமும், மக்களிடமும் விவரங்களை கேட்டறிந்தார்.

மாவட்ட நிர்வாகங்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய பூங்கோதை, அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அதிகாரிகள் மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதையும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அங்கிருந்து அவர்கள் 8 பேரையும் பாவூர்சத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள பாலிடெக்னி கல்லூரியில் தங்க வைக்க முயற்சித்தபோது அங்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடையநல்லூருக்கே அழைத்து செல்லப்பட்டனர்.

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...