முகப்பு சினிமா தூத்துக்குடி: `முழு லாக்டெளனில் அவசியமில்லாம சுற்றினால் எப்படி?’ - எச்சரித்த எஸ்.பி

தூத்துக்குடி: `முழு லாக்டெளனில் அவசியமில்லாம சுற்றினால் எப்படி?’ – எச்சரித்த எஸ்.பி

கொரோனா வைரஸின் தாக்குதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு, இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜூலை மாதத்தைப் போலவே, இம்மாதமும் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அறிவுரை கூறும் எஸ்.பி ஜெயகுமார்

இம்மாதத்தின் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு, இன்று அமல்படுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவசியமில்லாமல் சாலைகளில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 32 பேரை நிறுத்தினார். பின்னர், அனைவரையும் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து அறிவுரை கூறினார்.

அதில் பேசிய அவர், “கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இம்மாதம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, எல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளில்லாத பொது ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. உங்களின் நலனுக்காகதான் அரசும், காவல்துறையும் உழைத்துக் கொண்டிருக்கிறது.

அறிவுரை கூறும் எஸ்.பி ஜெயகுமார்

இந்தநிலையில் அவசியம் இல்லாமலும், தேவையில்லாமலும் சாலைகளில் பைக், கார்களில் சுற்றித்திரிந்தால் எப்படி? உங்கள் ஒவ்வொருவரின் உடல்நலத்தில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. கொரோனா பாதிப்பை உணராமல் இப்படி அலட்சியமாக ஏன் வெளியில் சுற்றுகிறீர்கள்? வாரத்தில் ஒருநாள் வெளியில் சுற்றாமல் வீடுகளில் இருந்து ஓய்வெடுங்கள். வெளியில் சென்று வந்தால் கைகளை சோப்பாலும், சானிடைசராலும் சுத்தமாகக் கழுவ வேண்டும். வாரத்தில் 3 நாள்களாவது கபசுரக்குடிநீர் குடிக்க வேண்டும்” எனச் சொல்லி அறிவுரை கூறியதுடன் எச்சரித்தார்.

Also Read: ஊரடங்கு நீட்டிப்பு: EPSக்கு உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்! |The Imperfect Show 27/7/2020

அதில், முகக்கவசம் அணியாத சிலரை அழைத்து, “ஏன் மாஸ்க் போடவில்லை?” எனக் கேட்டதுடன் உடனே அவர்களுக்கு மாஸ்குகளை வழங்கினார். பின்னர், அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டதுடன், கூடுதலாக ஒரு மாஸ்கும் வழங்கப்பட்டது.

வாகன தணிக்கையில் போலீஸார்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி ஜெயகுமார், “தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி, 200 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படுகிறது. ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட 7,000 வழக்குகளில் 3,590 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், 3,400 வாகனங்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 190 வாகனங்கள் மட்டுமே ஒப்படைக்க வேண்டியுள்ளது” என்றார்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...