முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் தென்னை விவசாயிகளுக்கு மற்றொரு தலைவலி!

தென்னை விவசாயிகளுக்கு மற்றொரு தலைவலி!

பகுதியில், தென்னையில் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய், இலைகள் கருகி, தேங்காய் விளைச்சல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், ராஜபாண்டி, வெள்ளகால், நாகல்குளம், பட்டமுடையார்புரம், சாலைப்புதூர், அருணாப்பேரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சுமார் 600 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் தென்னை சாகுபடியில் செய்துள்ளனர். தற்போது தென்னை மரத்தில் காய் பிடிக்கும் நேரத்தில் கருந்தலை புழு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நோயால் தென்னை மரங்கள் பட்டுப்போய், இலைகள் கருகி, தேங்காய்கள் விளைச்சல் இல்லாமல் காணப்படுகின்றன. மேலும் ஒரு சில விவசாயிகள் தங்களது தோப்புகளில் கருந்தலை புழு நோய்க்கு மருந்து அடித்தும் நோய் தாக்கம் குறையாததால் அருகில் இருக்கும் தென்னந்தோப்புகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்களுக்கும் இந்நோய் வைரஸ் நோய் போல் வேகமாக பரவுகிறது.

இதனால் தேங்காய்கள் பறிக்க முடியாமல் மிகப் பெரிய நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். தற்பொழுது கீழப்பாவூர் குளங்களில் போதுமான தண்ணீர் இருக்கிறது. ஆனால், தென்னை மரத்தில் தேங்காய்கள் நல்ல விளைச்சல் இருக்கும் பட்சத்தில் தேங்காய் விளைச்சலின் பலனை அனுபவிக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஆகவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் தென்னை மரங்களை பார்வையிட்டு வேகமாக பரவி வரும் இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நல்ல தீர்வு காண வேண்டும் எனவும், பட்டுப்போன மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...