முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் தெலங்கானாவில் நிகழ்ந்த கொரோனாவைவிட கொடுமையான சம்பவம்!!

தெலங்கானாவில் நிகழ்ந்த கொரோனாவைவிட கொடுமையான சம்பவம்!!

மாநிலத்தில் உள்ள காமாரெட்டி மாவட்டம், லிங்கம் பேட்டை மண்டலத்தில் உள்ள நல்லமடுகு தாண்டா கிராமத்தில் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

நல்ல மடுகு தாண்டா கிராமத்தில் வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) நடைபெற்றன. அப்போது ஒரு சிலர் வேலைக்கு தாமதமாக வந்துள்ளனர்.

அவர்களிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள் என்று ஏற்கெனவே அங்கு வந்து வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கேள்வியெழுப்பியதாக தெரிகிறது. இதனால் அங்கு இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து காலையில் நடைபெற்ற சம்பவம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி கைகலப்பு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் இருதரப்பினரும் தடிகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தொழிலாளர்களிடையே கடுமையான அளவில் நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த லிங்கம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தாக்குதலில் காயமடைந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...