முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் தேயிலைத் தோட்டங்களை வாட்டும் கொரோனா!

தேயிலைத் தோட்டங்களை வாட்டும் கொரோனா!

இந்தியாவில் பாதிப்பால் மார்ச் 25ஆம் தேதி முதல் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி வரையில் தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேயிலைத் தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவின் தேயிலைத் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் மார்ச் 22ஆம் தேதியிலேயே தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட பலரின் வாழ்வாதாரம் இல்லாமல் போய்விட்டது.

ஏப்ரல் மாத மத்தியில் தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, 50 சதவீத ஊழியர்களுடன் தேயிலைத் தோட்டங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் தேயிலைப் பறிப்புக் காலத்தின் முதல் பகுதிக்கான பறிப்புப் பணி முடங்கியதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் – ஏப்ரல் மாதங்களில் முதல் பகுதி பறிப்புப் பணி நடைபெறுவது வழக்கம். பறிக்கப்படாமல் அதிகமாக வளர்ந்துள்ள தேயிலைகள் வீணாக வெட்டப்பட்டுள்ளதாக இந்திய தேயிலைக் கூட்டமைப்பின் அஸ்ஸாம் கிளைச் செயலாளரான தீபங்கர் தேக்கா கவலை தெரிவித்துள்ளார்.

மதிப்பீடுகளின்படி, அஸ்ஸாம் மாநில தேயிலைத் தொழிலில் மட்டும் ஊரடங்கு உத்தரவால் ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உற்பத்தி தொடங்கியிருந்தாலும், விற்பனைக்குத் தடை இருப்பதால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதாவது தேயிலை உற்பத்திக்கு அனுமதி வழங்கியும் அது வீண்தான் என்று இத்துறையினர் கூறுகின்றனர். தேயிலை விற்பனை இல்லாத நிலையில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்க முடியாத நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

நடுத்தர அளவிலான ஒன்றில் கிட்டத்தட்ட 2,000 பேர் வேலைபார்க்கின்றனர். இவர்களுக்கான சம்பளத்தைக் கொடுப்பதில் சிக்கல் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...