முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் தொடரும் அவலம்; மருத்துவர்களுக்கு கைதட்டி கொண்டாட சொன்ன பிரதமர் எங்கே?

தொடரும் அவலம்; மருத்துவர்களுக்கு கைதட்டி கொண்டாட சொன்ன பிரதமர் எங்கே?

மருத்துவர்களுக்கு கைதட்டி கொண்டாட்டம், தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜைகள், தெருவெங்கும் மணியடித்துக் கொண்டு ‘ஓடிப்போ கொரோனா’ என்ற முழக்கங்கள், இருளில் மூழ்கி அகல் விளக்கேத்தி ஒற்றுமையை வெளிக்காட்டும் உணர்வு என பிரதமர் மோடியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இவையெல்லாம் அரங்கேறின.

ஏன் செய்கிறோம் என்ற எண்ணமில்லாமல் பிரதமர் சொல்லிவிட்டார் அதனால் செய்கிறேன். அவ்வாறு செய்யும் போது புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து அதனை சமூக வலைதளங்களில் போட்டு சில லைக்குகள் வந்தால் போதும் என்ற பெருமிதம். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், “இவங்க இன்னைக்கு கைதட்டாறாங்க, ஒற்றுமைக்கு விளக்கேத்துறாங்க; நாளைக்கே பக்கத்து வீட்டு டாக்டருக்கு எதாவது ஆச்சுனா போய் என்னனு பார்ப்பாங்களா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இன்றைக்கு அந்த அவல நிலைதான் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்த இரண்டு மருத்துவர்களின் உடலை அடக்கம், தகனம் செய்யமுடியாமல் பரிதவிக்கும் சம்பவம் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த மருத்துவர் சைமன் என்பவரது உடலை அடக்கம் செய்யவிடாமல் போராடி தடுத்த மக்கள், உச்சகட்டமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை உடைத்து, அதன் ஊழியர்களை கொடூரமாக தாக்கியதுடன், அவர்கள் வீசிய கற்களும், பாட்டில்களும், உருட்டுக்கட்டைகளும் உயிரிழந்த மருத்துவரின் சடலத்தையும் தாக்கி சென்றுள்ளது.

அதன்பின்னர் மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர் பிரதீப் குமார் என்பவர் பாதுகாப்பு உடைகளை அனிந்து கொண்டு, ஆம்புலன்ஸை தானே ஓட்டிக்கொண்டு இடுகாட்டுக்கு சென்று, இரண்டு வார்டு பாய்களின் உதவியுடனும், போலீஸ் பாதுகாப்புடனும் மருத்துவர் சைமனின் உடலை தனி ஒருவராக அடக்கம் செய்துள்ளார். சடலத்தை ஆழ்குழிக்குள் இறக்கிய பின்பு, உபகரணங்கள் ஏதும் இல்லாமல் வெறும் கைகளாலேயே மணலை அள்ளி போட்டுள்ளார். தன்னலமற்ற சேவையாற்றும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்கள், உயிரிழ்ந்த பின்னர் அவர்களின் உடல்கள் பல மோசமான சூழலை சந்திக்கும் சூழல், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உருவாகியுள்ளது. மேகாலயாவில் கடந்த வாரம் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அதே கொரோனாவல் உயிரிழந்தால் அவருக்கு நீங்கள் செய்யும் மரியாதை இதுதானா என மருத்துவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தில் யாரேனும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தால் இதே மாதிரிதான் பிரச்சினை செய்வார்களா. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் சென்றுவிட்டால் என்ன நிலை ஏற்படும் என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்களின் நிலை ஏற்கனவே பரிதாபகரமாக உள்ளது. குறிப்பாக பாதுகாப்பு உடைகள், கவசங்கள் இல்லாமல் மருத்துவர்களும் செவிலியர்களும் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். சில இடங்களில் ரெயின் கோர்ட், பிளாஸ்டிக் துனிகளை சுற்றிக்கொண்டு மருத்துவம் பார்க்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் குடும்பம் இல்லாமல் இல்லை. அவர்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் இல்லை. எனினும், குடும்பம், குழந்தைகள், கணவன், மனைவி, பெற்றோர் என அனைவரையும் புறந்தள்ளிவிட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதனையடுத்து பிரதமரின் கோரிக்கைகளை ஏற்று கைதட்டி கரவோசம் எழுப்பி உற்சாகப்படுத்திய மக்களின் சுயரூபம் இன்று வேறுமாதிரியாக வெளிப்படுவது கவலைக்குறிய விஷயமாக பார்க்கப்படுவதுடன், மனித தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

மருத்துவர்களுக்கு உற்சாகம் ஏற்பட கைதட்ட சொன்ன பிரதமர் மோடி மருத்துவர்களின் இன்னல்களுக்கு தீர்வு காணப்படுவது குறித்து பேச வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மக்களை எச்சரிக்கும் பொருட்டோ வேண்டுகோள் விடுக்கும் பொருட்டோ ட்விட்டரில் பதிவிட முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...