முகப்பு சினிமா `தோப்பில் கறி விருந்து; ஃபேஸ்புக்கில் போட்டோ!' - அமைச்சரின் ஆதரவாளர்களை வளைத்த போலீஸ்

`தோப்பில் கறி விருந்து; ஃபேஸ்புக்கில் போட்டோ!’ – அமைச்சரின் ஆதரவாளர்களை வளைத்த போலீஸ்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் வரும் மே மாதம் 3-ம் தேதிவரை நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பல மாவட்டங்களில் விதிகளை மீறுபவர்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல புதுவையில் விதிகளை மீறியும் தேவைகளற்றும் வெளியில் சுற்றிக்கொண்டிருப்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பிரியாணி விருந்து

இது ஒருபுறமிருக்க, ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி ஒன்றாக அமர்ந்து விருந்து கொண்டாடியதுடன், அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு போலீஸிடம் கூண்டோடு சிக்கியிருக்கின்றனர்.

புதுவை கால்நடை மருத்துவமனையின் உதவியாளரான கிருஷ்ணராஜ், டெபுடேஷன் அடிப்படையில் பல ஆண்டுகளாகப் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அதேபோல வனத்துறை ஓட்டுநராகக் கல்யாணசுந்தரம் என்பவரும் அமைச்சர் நமச்சிவாயத்தின் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம்

இவர்கள் இருவரும் இணைந்து தங்கள் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து வைக்க முடிவெடுத்திருக்கின்றனர். அதனடிப்படையில் நேற்று தங்கள் நண்பர்கள் 14 பேரை அழைத்து, வில்லியனூரை அடுத்த மனவெளிப் பகுதியில் முட்டையுடன் பிரியாணி விருந்து வைத்தனர்.

வரிசையாகப் போடப்பட்ட வாழை இலைகளில் முட்டையுடன் பிரியாணியைப் பரிமாறினர். அத்துடன் பிரியாணியில் இருந்த கறித்துண்டை கடித்தவாறும் பிரியாணியை சாப்பிட்டவாறும் புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து ஃபேஸ்புக்கில் பெருமையாகப் பதிவிட்டனர். ஆனால், அந்தப் படத்தை பதிவிறக்கம் செய்த நெட்டிசன்கள், “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில், அரசு அறிவித்த விதிமுறைகளை மீறியும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் இல்லாமலும் இருக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், வழக்கு எல்லாம் தக்காளி வாங்குவதற்காக மார்க்கெட் போவோர்கள் மீது மட்டும்தான் பாயுமா, அதிகாரவர்க்கத்தின் ஆதரவாளர்கள் மீது பாயாதா?” என்ற கேள்விகளுடன் சமூக வலைதளத்தில் உலவவிட்டனர்.

ஊரடங்கு உத்தரவு

பெருமைக்காக செய்த பதிவு வில்லங்கமானதை அறிந்த பிரியாணிக் கும்பல், உடனே ஃபேஸ்புக்கில் இருந்து வீடியோ, போட்டாவை உடனடியாக நீக்கினர்.

Also Read: “98 கிடா, 602 நாட்டுக்கோழி!” – இரவு 11 மணி வரை நடந்த மேலூர் கறி விருந்து!

ஆனால், வாட்ஸ்-அப் குழுக்களில் அவை வைரலானதால், சம்பத்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி வில்லியனூர் போலீஸாருக்கு உத்தரவிட்டனர் உயரதிகாரிகள். அதையடுத்து கிருஷ்ணராஜ், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 14 பேர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது, தொற்றுநோய் பரப்புதல் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் வில்லியனூர் போலீஸார்.

Must Read

அடித்துச் சென்றது கடல்- ஆனால் ரவிராஜ் TVல் பார்த்த நிகழ்ச்சி ஒன்றைப் போல கைகளை அகட்டி மிதந்து தப்பித்தார்

கனடா ஸ்காபரோவில் உள்ள கடல் ஒன்றில் குளித்துக் கொண்டு இருந்தார் ரவிராஜ் சைனி என்னும் 10 வயது சிறுவன். திடீரென கிளம்பி வந்த பெரிய அலை ஒன்று அவனை அப்படியே கடலுக்குள் இழுத்துச்...

மர்மமாக காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு குடும்பஸ்தர் : என்ன நடந்தது ?

கனடாவில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக...

அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கி.: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமர்நாத் யாத்திரையை நடத்துவது அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

டேனி

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள டேனி பார்வையாளர்களையின் பொறுமையை சோதிப்பதாக அமைந்துள்ளது.

ராமர் கோவிலுக்கு இன்று அடிக்கல்; எப்படி இருக்கிறது அயோத்தி? – லேட்டஸ்ட் நிலவரம்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.