முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் த்ரிஷாவின் அசத்தலான டான்ஸ்! வைரலாகும் டிக்டாக் வீடியோ

த்ரிஷாவின் அசத்தலான டான்ஸ்! வைரலாகும் டிக்டாக் வீடியோ

நடிகை சினிமாவில் நடிக்க துவங்கி 18 வருடங்களுக்கு மேல்ஆகிவிட்டது. அவர் தற்போதும் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தான் இருக்கிறார். அவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன.

அடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காக அவர் பொன்னியின் செல்வன் நாவலை படித்து வருவதாக சில மாதங்கள் முன்பே கூறியிருந்தார் அவர்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படங்கள் ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. அதனால் த்ரிஷா தனது வீட்டிலேயே இருக்கிறார்.

அவர் சமீபத்தில் டிக்டாக்கில் இணைந்த நிலையில் தற்போது அடிக்கடி அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். தற்போது அவர் Cannibal என்ற பாடலுக்கு ஆடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு உள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது வரை 2.6 மில்லியன் ரசிகர்களுக்கும் மேல் அந்த விடியோவை பார்த்துள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அதை லைக் செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதன் காரணமாக தங்களுக்கு கிடைத்துள்ள நேரத்தினை பிரபலங்கள் பல விதமாக செலவழித்து வருகின்றனர்.

உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என பல விஷயங்கள் செய்கின்றனர். த்ரிஷா நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளார்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...