முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர்...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் கொடுத்தார். தன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் புகார் தெரிவித்தார்.

பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்றும், அவர் வேலை பார்க்கும் இடங்களில் எல்லாம் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் ஹெலன் கூறினார். இதை பார்த்த வனிதா ஹெலன் பொய் புகார் தெரிவிப்பதாகவும், அவர் தன்னிடம் பணம் கேட்பதாகவும் கூறினார். விவாகரத்து செய்யாதவரையா வனிதா விஜயகுமார் திருமணம் செய்தார் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வனிதா விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரேசகர் தன் கருத்தை தெரிவித்தார். இதை பார்த்த வனிதா அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ரவீந்தரோ நான் மன்னிப்பு கேட்க முடியாது, மாறாக என் உடல் எடையை விமர்சித்ததற்காக வனிதா தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் ரவீந்தர் பேட்டி ஒன்றில் வனிதா பற்றி கூறியிருப்பதாவது,

எலிசபெத் ஹெலன் நான்கு ஆண்டுகளாக பீட்டர் பால் விஷயத்தில் ஏன் ஒரு முடிவு எடுக்கவில்லை என்று வனிதா கேட்பது கேனத்தனமானது. ஹெலனுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர் பிள்ளைகளின் நலனை மனதில் வைத்து தான் முடிவு எடுக்க வேண்டும். நல்ல குடும்பத்து பெண் அப்படித் தான் இருப்பார். அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டார்.

என் பர்சனல் விஷயத்தை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று வனிதாக்கா கேட்கிறார். இது அவர் பர்சனல் கிடையாது. ஒரு குடும்பத்தை கெடுத்ததால் தான் முதல் மனைவியின் கதறலை பார்த்து நாங்கள் எல்லாம் நியாயம் கேட்கிறோம். நான் வனிதாக்கா அளவுக்கு தரம் கெட்டு பேச விரும்பவில்லை. அவர் விவாகரத்து பெறாத பீட்டர் பாலை திருமணம் செய்தது தவறு என்று தான் சொல்கிறேன்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி அம்மா மாதிரி நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். 16 வயது மகளிடம் போய் நான் மீண்டும் கல்யாணம் பண்ணிக்கட்டா என்று கேட்பது தான் கேவலமானது. லைவில் வந்து கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் வருவாரா, விளக்கம் கொடுக்க வர மாட்டாரா என்று தெரிவித்துள்ளார்.வனிதா விஜயகுமார் தன் யூடியூப் சேனலில் லைவில் வந்து பேசினார். பேசி முடித்தபோது பீட்டர் பாலை கேமராவுக்கு முன்பு வரவழைத்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். அதை தான் தயாரிப்பாளர் ரவீந்தர் விமர்சனம் செய்துள்ளார்.

வனிதா தன் திருமணத்தின்போதும், லைவிலும் பீட்டர் பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததை பார்த்தவர்கள் விமர்சித்துள்ளனர். இதை பார்த்த வனிதாவோ முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு என்று விளக்கம் அளித்துள்ளார்.

Must Read

லண்டனில் தமிழர்களின் மானத்தை வாங்கிய செக்ஸ் SEX நன்தவவர்மன் ?

விசா இல்லை, கள்ளமாக விம்பியில் வேலை செய்தாலும் ஒரு வெள்ளை இனப் பெண்ணை வளைத்து. அவருக்கு குடிக்க கொடுத்து , கற்பழித்துள்ளார் பெரஸ்லிங்கம் நன்தவவர்மன் என்னும் 40 வயது இலங்கை தமிழர். இது...

வரிசையாக காத்திருக்கும் அடுத்த ராஜபக்ஷர்கள்: இனி என்ன நடக்க இருக்கிறதோ ?

மகிந்த தரப்பு தேர்தலில் அடைந்த பெரு வெற்றி ஒரு புறம் இருக்க, அவரது வாரிசுகள் பலரும் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் பெரும் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். இம்முறை நமால் ராஜபக்ஷவுக்கு, ஒரு...

ராஜபக்ஷர்கள் எப்படி சிக்கி தவிக்கப் போகிறார்கள்- முடிவு எப்படி வரும்- இதோ தகவல்

இன்னும் பல ஆண்டுகளுக்கு இலங்கையில் ராஜபக்ஷர்களை அசைக்க முடியாது. அவர்கள் ஆட்சிதான் இனி தொடர உள்ளது என்று பலர் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில். அவர்கள் சந்திக்கவுள்ள பெரும் சவால் எவை ?...

கணவனுக்கு தெரியாமல் மொட்டை மாடியில் மனைவி நடத்திய விபச்சார விடுதி: கொள்ளைச் சம்பவம் வேறு !

நகை கொள்ளையடிக்கப்பட்டது என்று பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்த கணவனுக்கு அதிர்சி மேல் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இப்படியும் நடக்குமா என்று சினிமாவை மிஞ்சிய ஷங்கர் பட கதை போல இருக்கு...

முன் நாள் உளவு அதிகாரியை சவுதி பட்டத்து அரசர் எப்படி கொலை செய்ய முயன்றார் தெரியுமா ?

முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற...