முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் நடிகையாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷின் தங்கை! க/பெ ரணசிங்கம் டீசரில் கவனித்தீர்களா?

நடிகையாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷின் தங்கை! க/பெ ரணசிங்கம் டீசரில் கவனித்தீர்களா?

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ள படத்தின் டீஸர் இன்று வெளிவந்தது. அதில் விஜய் சேதுபதி தண்ணீர் பிரச்னைக்காக குரல் கொடுப்பது போல காட்டப்பட்டு இருந்தது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷின் தங்கையும் நடித்திருந்தார் என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள்?. ஜி.வியின் தங்கை பவானி ஸ்ரீ நடிகையாக அறிமுகம் ஆகும் முதல் படம் இது. விஜய் சேதுபதி குடும்பத்தில் ஒருவராக தான் அவர் நடித்துள்ளார்.

க/பெ ரணசிங்கம் டீசர் இன்று வெளிவந்த நிலையில், இதற்கு வாழ்த்து தெரிவித்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

“க/பெ ரணசிங்கம் டீமுக்கு வாழ்த்துக்கள். முதல் படத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீக்கு பெஸ்ட் ஆப் லக்” என ஜீவி பிரகாஷ் ட்விட் செய்துள்ளார்.

சைந்தவி பதிவிட்டுள்ள ட்விட்டில் கூறியிருப்பதாவது..

“என் sister-in-lawவின் முதல் படம் க/பெ ரணசிங்கம். அதிகம் பெருமையாக இருக்கிறது ஸ்வீட்டி. உனக்கு என் வாழ்த்துக்கள். நீ மிரட்டலாகநடித்திருப்பாய் . உன் ஆசைகள் மற்றும் கனவுல அனைத்தும் நிஜமாகட்டும்” என சைந்தவி கூறியுள்ளார்.

இதற்கு முன்னே ஒரு வெப் சீரிஸில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமலா அக்கினேனி நடித்த High Priestess என்ற வெப் சீரிஸில் தான் அவர் நடித்து இருந்தார். தற்போது க/பெ ரணசிங்கம் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

பெ.விருமாண்டி இயக்கியுள்ள க/பெ ரணசிங்கம் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் டீசரை பார்க்கும் போது அது சமூக பிரச்சனைகள் பற்றி அதிகம் பேசும் என்பது தெரிகிறது.

“சாதி மத, அரசியலை தாண்டி இன்னைக்கு தண்ணீர், காற்றை வைத்து தான் இன்று மொத்த உலக அரசியல் நடக்கிறது.”

“இது புறம்போக்கு இடம்.. அதை எப்படி பட்டா போட்டீங்க..”

“2000 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்”

என விஜய் சேதுபதி பேசும் சில வசனங்கள் டீசரில் நம் கவனத்தை ஈர்க்கிறது. அதனால் சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் ஹீரோ, வில்லன்களால் அவருக்கு ஏற்படும் பிரச்சனை பற்றித்தான் படம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த படத்தின் இயக்குனர் விருமாண்டி பிரபல நாடக நடிகர் பெரிய கருப்பத்தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே, சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் தான் இசையமைத்து உள்ளார். இசை அமைக்கும் போது க/பெ ரணசிங்கம் படத்தை பார்த்த ஜிப்ரான் வியந்துவிட்டார். அது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருந்தார். நயன்தாரா நடித்த அறம் படத்திற்கு பிறகு இது அதிகம் பேசப்படும் என அவர் கூறியிருந்தார்.

அதற்கு தகுந்தாற்போல இன்று வெளிவந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 12 மணி நேரத்தில் அது 16 லட்சம் பார்வைகளை அது பெற்றுள்ளது. மேலும் youtube ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...