முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் நடிகை ஷோபனாவிடம் ஹேக்கர்கள் கைவரிசை! போலீசில் புகார்

நடிகை ஷோபனாவிடம் ஹேக்கர்கள் கைவரிசை! போலீசில் புகார்

நடிகை சோபனா 80களில் துவங்கி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பல படங்களில் நடித்தவர். மலையாளத்திலும் தெலுங்கிலும் அவர் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்கள் முன்பு வெளிவந்த Varane Avashyamund என்ற மலையாள படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஷோபனாவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கை மர்ம நபர்கள் சில ஹேக் செய்துவிட்டனர். சமீப நாட்களாக அதில் வெளிநாட்டினர் சிலரது வீடியோக்கள் தனது பக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அது போல ஐந்து வீடியோக்கள் மர்ம நபர்களால் இவரது அதிகாரபூர்வ பக்கத்தில் போடப்பட்டுள்ளது. இது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஹேக்கிங் சம்பவம் பற்றி மற்றவர்களுக்கு தெரியப்படுத்த இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஷோபனா. “என்னுடைய முகநூல் கணக்கு மற்றும் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் கைப்பற்றியுள்ளனர். அதை மீண்டும் பெற போலீஸ் உதவியுடன் முயன்று வருகிறோம். அது மீண்டும் கிடைத்ததும் மீண்டும் அதில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பேன்” என கூறியுள்ளார் ஷோபனா.

இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நடன பள்ளி நடத்திவரும் ஷோபனா தனது நடன வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...