முகப்பு சினிமா `நடுரோட்டில் இறக்கிவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி' -தேனி காவல்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை

`நடுரோட்டில் இறக்கிவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி’ -தேனி காவல்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை

தேனி மாவட்டம் போடியின் வெவ்வேறு பகுதிகளைச் சேந்தவர்கள் கார்த்திகா மற்றும் அபர்ணா. இவர்கள் இருவரும், போடி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் செல்ல, அவரவர் வீட்டின் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களைத் தொடர்புகொண்டு, ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டிய போடி போலீஸார், நடுரோட்டில் ஆட்டோவை மறித்துப் பறிமுதல் செய்துள்ளனர்.

`கார்த்திகா

Also Read: மதுரையைத் தொடர்ந்து தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைப்பு!

இது தொடர்பாகப் பேசிய கார்த்திகா, “வரும் ஞாயிறுக்கிழமை, எனக்குப் பிரசவ நாள். முன்னதாக போடி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் செல்ல, இன்று காலை எனது பக்கத்து வீட்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் முரளி அண்ணனை அழைத்தேன். அவரும் ஆட்டோவை எடுத்துவந்து, என்னையும், என் அம்மாவையும் போடி அரசு மருத்துவமனையில் விட்டுவிட்டுச் சென்றார்.

பரிசோதனைகள் முடிந்து, அவருக்கு போன் செய்தேன். அவரும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு வந்தார். வரும் வழியில் ஆட்டோவை போலீஸார் பிடித்துக்கொண்டார்கள். இப்போது, நான் போடி அரசு மருத்துவமனையிலிருந்து வெயிலில் நடந்துவருகிறேன். என்னால் தானே முரளி அண்ணனுக்கு இப்படி ஆனது என வீட்டிற்குப் போகாமல், போடி காவல்நிலையத்திற்கு வந்தேன். எனக்காகத்தான் இவர் வந்தார் எனக் கூறினேன். ஆனால், போலீஸார் கேட்கவில்லை” என்றார் வருத்தத்தோடு.

அபர்ணா

Also Read: `தீ தடுப்புக் கோடு அமைப்பதில் முறைகேடா?’ – தேனி வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை

இதே போல, அபர்ணா பேசிய போது, “இன்னும் 10 நாள்களில் எனக்கு பிரசவம். இதனால், போடி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் செல்ல, என் வீட்டின் பக்கத்தில் உள்ள பாண்டியன் என்பவரது ஆட்டோவில், மருத்துவமனைக்குச் சென்றேன். வரும் வழியில், ஆட்டோவை போலீஸார் மறித்தனர். மருத்துவமனை செல்வதாக ஆட்டோ ஓட்டுநர் கூறினார். ஆனால், என்னை ரோட்டில் இறக்கி விட்டனர். என்னுடைய நிலைமையைக் கூறினேன். 108 ஆம்புலன்ஸ் வரும். அதில் ஏறி மருத்துவமனை செல்லுங்கள்.!’ எனக் கூறி, ஆட்டோவைப் பறிமுதல் செய்து, ஆட்டோ ஓடுநரை அழைத்துச் சென்றுவிட்டார்கள். நடு ரோட்டில், வெயிலில் காத்திருந்தேன். ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. பின்னர் நடந்தே வீட்டிற்கு வந்தேன்” என்றார் வேதனையோடு.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறிய போது, “தேவையில்லாமல், ஆட்டோ ஓட்டுநர்கள் இப்படி ஏதாவது காரணம் சொல்லி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் பறிமுதல் செய்யப்பட்டது” என்பதோடு முடித்துக் கொண்டனர்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...