முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் நண்பர் கேட்ட உதவி... ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வென்டிலேட்டரை கொடுத்த குடும்பம்!

நண்பர் கேட்ட உதவி… ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வென்டிலேட்டரை கொடுத்த குடும்பம்!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளாவிய பெருந்தொற்றாக உருவெடுத்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து வரும் சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் மருத்துவமனைகளும் சுகாதார அமைச்சகங்களும் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன. பெரும்பாலும், உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

ஸ்டீபன் ஹாக்கிங்

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தனது இறுதிக் காலங்களில் செயற்கை சுவாசம் பெற்று வந்த வென்டிலேட்டரை அவரது குடும்பத்தினர், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில், கேம்பிரிட்ஜில் உள்ள ராயல் பாப்வொர்த் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் மகளான 49 வயதுடைய லூசி ஹாக்கிங், தன் தந்தையான ஹாக்கிங் நோயால் அவதிக்கு உள்ளாகி இருந்தபோது ராயல் பாப்வொர்த் மருத்துவமனையால் மிகத் திறமையான மற்றும் இரக்கத்துடன் கூடிய அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவச் சேவைகளைப் பெற்றதாக தெரிவித்தார்.

ராயல் பாப்வொர்த் மருத்துவமனையில் எங்கள் பழைய நண்பர்கள் சிலர் எங்கள் குடும்பத்தை தொடர்புகொண்டு உதவி கோரி இருந்தனர். என் தந்தை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு வென்டிலேட்டர் வசதி அளிக்கப்பட்டிருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு அவருக்காக பயன்படுத்திய அனைத்து மருத்துவப் பொருள்கள் மற்றும் உபகரணங்களையும் இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத் துறையினருக்கு அளித்துவிட்டோம். ஆனால், அவருக்காக வாங்கிய பொருள்கள் சிலவற்றை அளிக்காமல் பராமரித்து வந்தோம்.

இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தந்தைக்குப் பயன்படுத்திய வென்டிலேட்டர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரிட்டன் சுகாதாரத் துறையை ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது. ராயல் பாப்வொர்த் மருத்துவமனையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சாதாரண நாள்களில் அளிக்கப்படும் சிகிச்சையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக அளிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹாக்கிங் குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட வென்டிலேட்டரை மருத்துவமனை நிர்வாகத்தின் பொறியியல் குழு ஆய்வு செய்தபின், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ராயல் பாப்வொர்த் மருத்துவமனையில் சுவாச மருத்துவப் பிரிவு இயக்குநர் மைக் டேவிஸ் பேசுகையில், ஹாக்கிங் குடும்பத்தாரின் இந்த உதவி மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. அவர்களின் இந்த உதவிக்கு கடமைப்பட்டவர்களாகி இருக்கிறோம். நாங்கள் இப்போது, கோவிட் 19 கொரோனா வைரஸுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் சூழலில், உள்ளூர் சமூகத்தினரிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உத்வேகம் அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், `நாம் ஒன்றாக நிற்போம்’ என்ற சீனப் பழமொழி பொறிக்கப்பட்ட மற்றொரு வென்டிலேட்டரை சீன மாணவர்கள் பிரிட்டன் சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். பிரிட்டனில் செவனிங் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற சீன முன்னாள் மாணவர்கள் சிலர், பிரிட்டனுக்கான சீனத் தூதரகம் மூலமாக இதை அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த மாணவர்கள் இக்கட்டான இந்தச்சூழலில் பிரிட்டன் மக்களுடன் ஆதரவாக நிற்பதாகவும் பிரிட்டிஷ் மக்கள் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வருவதில் பெரு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரிட்டன் அரசுக்கு தாங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Must Read

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...

`கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ – சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள சீனா தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம்...

8 வீடுகள் அப்படியே கடலுக்குகள் சென்றது: கடல் நீர் உள்ளே வந்தது சுணாமியை போல

நோர்வே நாட்டில் வட பகுதியில் உள்ள அல்டா என்னும் இடத்தில், பெரும் நிலப்பரப்பு ஒன்று கடலுக்குள் சென்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது சுணாமி போன்று கடல், கரையை நோக்கி பெருக்கெடுத்து...

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள 33 முதல் 100 சதவீதம் வரை பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பணியிடங்களில்...