முகப்பு சினிமா நம்பிக்கையூட்டும் EIDD-2801 வேதிப்பொருள்... விரைவில் கொரோனாவுக்கு மருந்து?

நம்பிக்கையூட்டும் EIDD-2801 வேதிப்பொருள்… விரைவில் கொரோனாவுக்கு மருந்து?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனாவுக்குப் பிறகான தனது பெரும்பாலான பொதுச்சந்திப்புகளில் ஒரு மருந்தைப் பற்றி தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுவருகிறார். ரெம்டெஸ்விர் (Remdesivir) என்பதே அந்த மருந்தின் பெயர்.

கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வரும்நிலையில், இதைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ரெம்டெஸ்விர் மருந்தைப் பரிந்துரைத்து வருகிறார்கள். இந்த ரெம்டெஸ்விர் எப்படிப் பரிந்துரைக்கு வந்தது?

Donald Trump

2002-ல் சார்ஸ் தொற்று பரவியபோதும், 2012-ல் மெர்ஸ் தொற்று பரவியபோதும், `அடுத்து அதே கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒரு வைரஸ் தாக்கலாம்’ என மார்க் டெனிசன் என்னும் வைராலஜி ஆராய்ச்சியாளர் எச்சரித்திருந்தார். கடந்த பத்து வருடங்களாக சார்ஸ், மெர்ஸ் உள்ளிட்ட கொரொனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களுக்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

மருந்து ஆராய்ச்சிகள் எப்படி நடைபெறுகின்றன?

பொதுவாகவே வைரஸ்களை அழிக்க முடியாது. அவை உடலில் புகுந்து தன் புரதங்களின் உதவியுடன் தன்னைப் பெருக்கம் செய்துகொள்கின்றன. அவை பெருகப் பெருக, உடல் பாதிப்பு அதிகரிக்கிறது. தற்போது பரவிவரும் Covid-19 வைரஸ் இயல்பும் அப்படித்தான். இவற்றைக் கொல்லவே முடியாது. அதனால் வைரஸ் பெருக்கத்தைத் தடுக்க மூன்று வழியில் முயல்வது என டெனிசன் குழுவினர் திட்டமிட்டார்கள். ஒன்று, மனித செல்களுக்குள் அவை நுழைந்ததும் அவற்றின் பெருக்கத்தைத் தடுப்பது. இரண்டு, மனித செல்களுக்குள் நுழையவிடாமலேயே செய்வது, மூன்று, நம் உடலின் உள்ளார்ந்த எதிர்ப்புசக்தி கொண்டு இந்த வைரஸுக்கு உருவாக்கும் நுரையீரல் குழாய் வீக்கம் போன்ற அதீத எதிர்வினைகளைக் கட்டுப்படுத்துவது.

Research on corona

டெனிசன் மற்றும் அவருடைய குழு, 2013-ம் ஆண்டில் இந்தக் கொரோனா வைரஸ்களுக்கு இருக்கும் பொதுவான அமைப்பு இயல்பைக் கண்டுபிடித்தது. அது கொரோனா வைரஸ்களின் வலிமையற்ற பகுதிகளில் பொதுவாகத் தென்படும் ஒரு புரதம். அந்தப் புரதம்தான் அவை பலமடங்காக உடலுக்குள் பெருகுவதற்கும் உதவுகிறது. இதற்கான மருந்துகளை அமெரிக்காவின் பிரபல மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் வைரஸுக்கு எதிரான மருந்துகள் பலவற்றில் தேடி வந்தார். அப்போது அமெரிக்காவின் பிரபல மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஜில்லியாட்டின் தயாரிப்புகளில் கிடைத்ததுதான் ரெம்டெஸ்விர்.

EIDD-2801 வேதிப்பொருள் கொரோனா வைரஸின் குறிப்பிட்ட புரதப் பகுதியை முடக்குவதாக ஏப்ரல் முதல் வாரத்தில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

COVID-19

2019-ன் இறுதியில் COVID-19 எச்சரிக்கை உருவானதும், இந்த ரெம்டெஸ்விர் அதற்குத் தீர்வாக இருக்கும் என டெனிசன் நம்பினார். முதலில், கொரோனா வைரஸ் வகைகளால் பாதிக்கப்பட்ட எலிகளில் அந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது. பிறகு பாதிக்கப்பட்ட மனித செல்களில் கடந்த ஜனவரி மாதத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனைகள் நடந்த அதே நேரம் EIDD-2801, என்கிற புதிய வேதிப்பொருள் ஒன்றையும் டெனிசன் குழு கண்டுபிடித்திருந்தது. இவை கொரோனா வைரஸின் குறிப்பிட்ட புரதப் பகுதியை முடக்குவதாக ஏப்ரல் முதல் வாரத்தில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். இது மட்டுமல்ல, கொரோனா வைரஸ் வகைகள் பாதிக்கப்பட்ட எலிகளில் இந்த மருந்தைச் செலுத்தும்போது வைரஸால் பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்கள் குணமடைவதாகவும் எலிகளால் எளிதாக மூச்சு விட முடிகிறது என்பதையும் கவனித்திருக்கிறார்கள். புரதத்தை முடக்குவதோடு மட்டுமல்லாமல் இந்தக் COVID-19 ரகத்திலிருந்து மியூடேட் ஆகும் வைரஸ்களுக்கும் எதிராகவும் செயல்படுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் முன்பிருந்த சவால் இந்த ரெம்டெஸ்விர் மற்றும் EIDD-2801 போன்ற மருந்துகளை COVID-19-க்கு எதிராக உருவாக்குவது. COVID-19 பாதிக்கப்பட்ட நபருக்கு ரெம்டெஸ்விர் செலுத்தப்படும்போது வைரஸ் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்துகிறது என்றாலும் அதனால் முழுதாகத் தீர்வு இல்லை என்றார் டெனிசன்.

இவற்றில் சில பின்னடைவுகள் இருக்கின்றன. ஒன்று, ரெம்டெஸ்விர் மருந்து சீனாவில் 158 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 79 பேருக்கு மருந்தற்ற பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ரெம்டெஸ்விர் மருந்து அளிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் குறையவில்லை. மேலும் மருந்து ஏற்படுத்திய பக்கவிளைவுகள் காரணமாக பாதியிலேயே தருவது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் சீனா, உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 2020 வரை ரெம்டெஸ்விர், விதிகளுக்குட்பட்ட பரிந்துரைக்கான மருந்துகளின்கீழ்தான் பட்டியலிடப்பட்டிருந்தது. ஜனவரியில்தான் அமெரிக்க அரசு கருணையின் அடிப்படையில் இதை உபயோகித்துக்கொள்ள அனுமதி அளித்தது. அதன்பிறகு அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பேர் இந்த மருந்துகளைப் பரிசோதித்துக்கொள்ள முன்வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவசரகதியில் நடைபெற்ற உலகின் மாபெரும் ட்ரையல் இது. பின்விளைவுகள் இருந்தும் அவர்களுக்கு மருந்து குறித்த தெளிவான விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கவில்லை. தற்போது ரெம்டெஸ்விர் மருந்தும் பலனளிக்கவில்லை என்கிற நிலையில் EIDD-2801 வேதிப்பொருள் அடுத்து பரிசோதனைக்காக வரிசையில் இருக்கிறது. இதற்குப் பிறகு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஆணையம் அனுமதித்திருக்கும் பல்வேறு மருந்துகள் பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்கின்றன.

Also Read: `மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்!’ -ஐ.நா பொதுச்செயலாளர்

இந்த மருந்துகள் எதுவுமே நிரந்தரத் தீர்வு அல்ல. ஒருவேளை இந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் பல்வேறு மருந்துகள் சேர்ந்து COVID-19 வீரியத்தைக் கட்டுப்படுத்தக்கூடுமே ஒழிய அது முழுவதுமாக நம்மைப் பாதுகாக்காது. ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் வைரஸுக்கு இதுநாள் வரை பல்வேறு மாத்திரைகள் அடங்கிய கலவையைக் கொண்டுதான் கட்டுப்படுத்தி வருகிறோம். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இவைதான் நமக்கான தற்காலிகத் தீர்வு.

Must Read

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...