முகப்பு சினிமா ‘நம்மை பாதுகாப்பவர்களை நாம் பாதுகாக்க வேண்டும்!’- சசிகுமார் வேண்டுகோள் #NowAtVikatan

‘நம்மை பாதுகாப்பவர்களை நாம் பாதுகாக்க வேண்டும்!’- சசிகுமார் வேண்டுகோள் #NowAtVikatan

நம்மை பாதுகாப்பவர்களை நாம் பாதுகாக்க வேண்டும்!

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சசிகுமார் #மருத்துவர்களேகடவுள் என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் காரணமாக நம்மை வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்திவிட்டு மருத்துவர்களும், செவிலியர்களும் அவர்களின் உயிரை பணயம் வைத்து நம்முடைய உயிரை பாதுகாத்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக கேள்விப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது, நம்முடைய உயிரை காப்பாற்றுபவர்களை நாம்தான் மதிக்க வேண்டும்.

என்னுடைய வருத்தத்தை மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மக்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. நாம் நடக்கவும்விடக்கூடாது. நம்மை பாதுகாக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களை நாமும் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் அதுதான் மனிதம். மனிதம் வளரவேண்டும் நன்றி” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்

மே 3-ம் தேதி வரை தளர்வு இல்லை!

ஊரடங்கு

இந்தியாவில் மே மாதம் 3-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தாலும், அந்த அறிவிப்புடன் சேர்த்து ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்படாத பகுதிகளில் சிறிய அளவிலான கட்டுப்பாடுகள் தளர்வு இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அது தொடர்பான ஆலோசனை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

அதன் பின்னர், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே மாதம் 3-ம் தேதி வரையில் தமிழகத்தில் எந்தத் தளர்வும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Must Read

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...