முகப்பு சினிமா `நாடகமே தம் வாழ்க்கை என வாழ்ந்த உஷா கங்குலியின் மரணம் பேரிழப்பு' - நாடகவியலாளர் பிரளயன்

`நாடகமே தம் வாழ்க்கை என வாழ்ந்த உஷா கங்குலியின் மரணம் பேரிழப்பு’ – நாடகவியலாளர் பிரளயன்

இந்தியாவின் குறிப்பிடத்தக்க நாடகச் செயற்பாட்டாளரும் ரங்ககர்மி (Rangakarmee) நாடகக் குழுவின் நிறுவனருமான உஷா கங்குலி மாரடைப்பு காரணமாக, நேற்று கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் பிறந்து தனது நாடகச் செயல்பாடுகள் அனைத்தையும் மேற்கு வங்காளத்தை மையமாகக் கொண்டு பங்காற்றியவர் உஷா கங்குலி.

70, 80-களில் மேற்கு வங்காளத்தின் நாடகத்துறையில் புதிய போக்கைக் கொண்டு வந்து மாற்று இந்தி தியேட்டர்களை அறிமுகப்படுத்தியவர் எனப் போற்றப்படும் இந்த ஆளுமையின் நினைவுகளைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சென்னை கலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், நாடகவியலாளருமான பிரளயன்.

“1997-ம் ஆண்டு ஆசிய அளவிலான திறந்த வெளி நாடக விழாவுக்காக எங்கள் குழுவை அழைத்திருந்தார் உஷா கங்குலி. அவ்விழாவின் இயக்குநரும் அவர்தான். அன்றிலிருந்து எங்கள் குழு அவர்களுடன் மிக நெருக்கமானவர்கள் ஆனோம்.

உஷா கங்குலி

அடிப்படையில் கல்லூரி பேராசிரியரான அவர் ரங்ககர்மி நாடக குழுவைத் தோற்றுவித்தது மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான பல கருத்தரங்குளைத் தலைமையேற்று நடத்தியவர். மேற்கு வங்கத்தில் வசித்தாலும் இவரின் நாடகங்கள் அனைத்தும் இந்தியிலேயே இருந்தன. ஒரு பரதநாட்டிய கலைஞராகத் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கி அவர் சிறிது சிறிதாக நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, அதன்பின் இன்னொருபடி மேல்சென்று மஹாபோஜ், ருடாலி போன்ற தலை சிறந்த நாடகங்களை இயக்குநராக அரங்கேற்றிய ஆளுமை இவர். மும்பை சேர்த்த திரைப்பட இயக்குநரான கல்பனா லஜ்மி இவரின் ருடாலி நாடகத்தைத் திரைப்படமாக எடுத்தார்.

Also Read: `வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு Remote Assistance சேவை.. அதுவும் இலவசமாக..!’ -HP நிறுவனம்

உஷா கங்குலி

திறந்தவெளி நாடகங்களுக்கென்று ஒரு மரபு உண்டு. 20 நிமிடத்துக்குள்ளாக இருக்க வேண்டும். ஒரு சிறிய அளவிலான பிரச்னை பற்றியே பேச வேண்டும். 80-களின் இடைக்காலத்தில் இம்மரபுகளை உடைத்தெறிந்து சுமார் ஒரு நேர அளவிலான திறந்த வெளி நாடகம் ஒன்றை எங்கள் குழுவினர் அரங்கேற்றினோம். அதன் தொடர்ச்சியாக 1997-ல் அவ்விழாவில் நாங்கள் அரங்கேற்றிய `பயணம்’ என்னும் நாடகத்தை மிகவும் பாராட்டினார் உஷா. மேலும், அவரும் மேடைநாடகங்களில் இருந்து திறந்த வெளிநாடகங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இவரின் மறைவு இந்திய நாடகத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு” என்றார் கூறினார்.

தான் பணியாற்றிய இத்துறை குறித்து உஷா அவர்கள் இப்படி கூறுவாராம், “நாடகத் தியேட்டரே எனது வாழ்க்கை மற்றும் ஆர்வம், ரங்ககர்மியே எனது குடும்பம்!”

Must Read

நடு இரவில் பகலை போல வெளிச்சம்- பாரிய விண் கல் வீழ்ந்தது வீடியோவில் பதிவு

நேற்றைய தினம் ஆர்மேனிய நாட்டில் உள்ள, யெறிவான் என்னும் நகரில் இரவில் பகல் போல தோன்றும் அளவு பெரிய வெளிச்சம் ஒன்று தோன்றியது. இதனால் மக்கள் திகைத்துப் போனார்கள்.  ஏதவது ராக்கெட் ஒன்று வெடித்ததா...

“சத்தான வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட வாங்க”

வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க அரசு பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில்...

அரசு விழாவுக்கு வலிய அழைத்து அவமானப்படுத்தப்பட்ட எம்.பி., எம்எல்ஏ!!

மாவட்டம், அஞ்சுகிராமத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 36.24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தவாறே காணொளிகாட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து...

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...