முகப்பு சினிமா `நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!' - மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

`நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!’ – மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

கொரோனாவின் தாக்கம் நாளுக்குள்நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் இல்லை. மற்ற நாடுகளைவிட கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவு.

கொரோனா சோதனை மையம்

இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசும், தனியார் அமைப்புகளும் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக முதன்முறையாக, நடமாடும் கொரோனா சோதனை மையம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“இதுவரை 56,948 பேர் பாதிக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற ஒரு வசதி கொரோனா பாதிப்பை விரைவாகக் கண்டறியவும். பரவுவதைத் தடுக்கவும் உதவும். மேலும் கொரோனா பரவல் அடுத்த சில மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம் என்பதால் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஐ.ஐ.டி அலுமினி கவுன்சில், மும்பை மாநகராட்சி, கே.ஆர்.எஸ்.எஸ்.என்.ஏ சோதனை அமைப்பு ஆகியவை ஒன்றாக இணைந்து இந்த நடமாடும் கொரோனா சோதனை மையத்தை நிறுவியுள்ளன. ஜாவா ஆட்டோ மொபைல் நிறுவனம் இந்தச் சோதனை மையத்தை ஆம்னி பேருந்து போன்று வடிவமைத்துக் கொடுத்துள்ளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள இந்த நடமாடும் சோதனை மையம், தற்போது கொரோனா வாரியர்ஸாகக் கருதப்படும் காவல் துறையினர், செவிலியர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது ஒரு மணிநேரத்திற்கு 15 முதல் 20 பேருக்குச் சோதனை செய்யப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வர உள்ளது. அப்படி வரும்பட்சத்தில் இதன் பயன்பாடானது 100 மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்திட்டம் வெற்றி பெரும் சூழலில் கொரோனா தாக்கம் அதிகமுள்ள மற்ற மாநிலங்களுக்கும் இந்த நடமாடும் சோதனை மையம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்தச் செயல்பாட்டை வெளிநாடுகள் பலவும் பாராட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...