முகப்பு சினிமா நிறைவான வாழ்வு, செல்வம் அருளும் நீடூர் ஸ்ரீ சோமநாதர்.. இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

நிறைவான வாழ்வு, செல்வம் அருளும் நீடூர் ஸ்ரீ சோமநாதர்.. இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

நிறைவான வாழ்வருளும் நீடூர் ஸ்ரீ சோமநாதர்…

‘திருவாரூரில் பிறக்கவும் காசியில் இறக்கவும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்’…

Posted by Sakthi Vikatan on Friday, April 24, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, நீடூர் ஸ்ரீ சோமநாதர் ஆலயம்.

‘திருவாரூரில் பிறக்கவும் காசியில் இறக்கவும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்’ என்பது முன்னோர்களின் வாக்கு. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே வாழும் வாழ்க்கை நிறைவான ஒன்றாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிறைவான வாழ்வைத் தரவல்ல ஈசனின் திருத்தலம் ஒன்று உண்டு. அதுவே நீடூர்.

நீடூர் சோமநாதர்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள இந்தத் தலத்தில் இறைவன் சோமநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு அருள்புரியும் அம்பிகை ‘வேயுறு தோளியம்மை’ என்னும் இனிய திருநாமத்தோடு கொலுவீற்றிருக்கிறாள்.

இந்தத் தலத்தில், இந்திரனின் கானத்தால் மகிழ்ந்த ஈசன் இந்திரன் முன்பு தோன்றி திருநடனக்காட்சி அருளினார். இதனால், இந்தத் தல இறைவனுக்கு, ‘கான நர்த்தன சங்கரன்’ என்ற திருநாமமும் ஏற்பட்டது.

worshipathome

நண்டாகப் பிறந்த தன்மசுதன் எனும் அசுரன் வழிபட்ட தலம் இது. அதனால் கடக ராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவனடியார்களுக்குத் திருவமுது படைக்கும் திருத்தொண்டைச் செய்துவந்த 63 நாயன்மார்களில் ஒருவரான முனையடுவார் நாயனார் முக்தி அடைந்த தலம் இது.

மண்ணுலக வாழ்வுக்குத் தேவையான சகல செல்வங்களையும் அருளும் தலம் இது. தேவர்களும் பிரமன், திருமால், பத்ரகாளி முதலிய தெய்வங்களும் சிவனை வழிபாடு செய்த தலம் இது. சகல கிரகங்களையும் தன் அருள்பார்வையால் வழிநடத்தும் அன்னையை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை.

இங்குள்ள முனையடுவார் நாயனாரை வணங்க, செயல்களில் வெற்றியும் பகைவர்களை வெல்லும் வலிமையும் உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...