முகப்பு சினிமா `நெடுஞ்சாலை ஏஞ்சல்கள்!' - குறுங்கதை #MyVikatan

`நெடுஞ்சாலை ஏஞ்சல்கள்!’ – குறுங்கதை #MyVikatan

சூரிய வெளிச்சத்தை வானம் மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. இரவு தன் இறகை விரித்து, உலகை மூடத் தயார் நிலையில் இருந்தது.

எறும்புகளின் அணிவகுப்பைப் போல, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்துகொண்டிருந்தன.

கனரக வாகனங்களை நெடுதூரம் இயக்கி வரும் ஓட்டுநர்கள், கடும் வெப்பத்திலிருந்து தங்களைப் படிப்படியாக விடுவித்துக்கொண்டிருந்தனர். வாகனத்தின் ஐன்னல் வழியே வரும் இதமான குளிருக்காக அவர்கள் காத்திருப்பது தெரிந்தது.

நெடுஞ்சாலைகளின் இதயமாக விளங்கும் லாரிகள், ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பத்து நாள்கள் இந்தியாவின் அகன்ற சாலைகளில் பயணிக்கும் களைப்பு ஒவ்வொரு லாரியின் சக்கரங்களிலும் தெரிந்தன.

Representational Image

அப்படி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் லாரி அது. திருச்சி வந்தடைய இரவு பத்து மணி ஆகியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு உணவகத்தின் பெயர்ப் பலகை அந்த லாரியை வரவேற்றது.

உணவகத்தின் முகப்பில் ‘ஓட்டல் ஸ்டார்’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் பலகை சிவப்பு, பச்சை, நீலம் என மாறி மாறி மின்னிக்கொண்டிருந்தது.

‘நீரோடை போலவே என் பெண்மை…

நீராட வந்ததே என் மென்மை…

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே…

வார்த்தைகள் தேவையா…’

எனக் காற்றில் கலந்து வந்த இளையராஜாவின் கீதம், அந்த உணவகம் முழுக்கப் பரவிக்கொண்டிருக்க,

அங்கு போடப்பட்டிருந்த பென்ச்சில் இருவர் தேநீர் அருந்தியபடி, ‘ இது ஜானகி பாடியதா, ஜென்சி பாடியதா ‘ எனத் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.

சுட்ட பரோட்டாக்களை எல்லாம் எகிப்து பிரமிடுகளைப் போல அடுக்கி வைத்து, இரு கைகளாலும் ஒரே நேரத்தில் அடித்து உருட்டிக்கொண்டிருந்தார் அந்த பரோட்டா மாஸ்டர். மூன்று பரோட்டாக்களை விழுங்கிய ஒருவன், கையில் ப்ளேட்டுடன் அடுத்த சுற்றிற்காக ஆர்வமுடன் மாஸ்டரின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தான்.

கொட்டாவி விட்டபடியே லாரியிலிருந்து இறங்கி வந்த அவன், இரு கைகளையும் மேலே உயர்த்தி தன் அலுப்பை போக்கிக் கொண்டான். லாரியைச் சுற்றி ஒவ்வொரு சக்கரத்தையும் ஆராய்ந்த பிறகு, முன்னிருக்கும் கண்ணாடியைத் தண்ணீர் ஊற்றிக் கழுவினான். அருகில் இருந்த குழாய் ஒன்றில் முகம், கை கால் அலம்பிவிட்டு நேராக ஸ்டார் உணவகத்திற்குள் நுழைந்தான்.

Representational Image

ஒரு ப்ளேட் கல்தோசையுடன், ஒரு ஆம்லேட்டை ஆர்டர் செய்த அவன் உணவகத்தின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த பென்ச்சில் அமர்ந்து, கடையில் ஒட்டப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் புகைப்படங்களை வேடிக்கை பார்த்தபடியே சாப்பிடத் தொடங்கினான்.

அவன் அருகில் அமர்ந்திருந்த அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், பீடி ஒன்றைப் பிடித்துக் கொண்டே பரோட்டா மாஸ்டரிடம்,

‘இன்னைக்கு எத்தன?’ என்றார்.

‘நாலு’ என்றார் மாஸ்டர்.

‘ஐயோ. நேத்து இரண்டு தானே’ என்றார் முதியவர்.

‘ஆமா’

‘கறுப்பு கலர்ல ஒண்ணு இருக்குமே. அது எங்க?’

‘அந்த நாலுல அதுவும்தான் ஒண்ணு’.

‘அட கடவுளே. அதுக்கு ஒரு குட்டி இருந்துச்சே? அது….?’

‘இங்கதான் எங்கையாவது இருக்கும்’.

அவர்கள் பேசுவது ஒன்றும் புரியாமல் இருக்க, இரு புருவங்களைச் சுருக்கியபடி அதை மேலும் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

‘ஹம்ம்….இந்த லாரிக்காரனுங்கதான் இப்படி அதிகம் செய்ரானுங்க. நம்ம கடை முன்னாலயே இன்னைக்கு மட்டும் நாலு ஏத்திக் கொன்னுருக்கானுங்கனா, அப்ப இந்தியா முழுக்க எத்தன இருக்கும் யோசிச்சுப் பாரு’, என்றார் முதியவர் பெருமூச்சு விட்டபடியே.

இதைக்கேட்ட அவன் முகம் மாறியது. சுருங்கிக் கிடந்த புருவங்கள் விரிந்தன.

‘அப்படியெல்லாம் இல்ல. இன்னைக்கு நாலுல மூணு காரால தான். ஆனா சாகும் போது அதுங்க நம்மல பாத்துக்கிட்டே கத்துங்க பாரு. அதத்தான் தாங்கிக்க முடியல. தினமும் இதைப் பத்திப் பேசி என்ன புண்ணியம்? வேலயப் பாரு’ என்றார் பரோட்டா மாஸ்டர்.

Representational Image

ஆமாம் என்று அதை ஆமோதிப்பவராக தலையை ஆட்டினார் முதியவர்.

சாப்பிட்ட உணவிற்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவன், லாரியை நோக்கி நடந்தான்.

லாரியின் பின்சக்கரம் அருகே ஏதோ ஒன்று அசைவது போலத் தெரிந்தது.

அன்று காலை அதே இடத்தில் அடிபட்டு இறந்த தன் தாயின் இரத்த வாடையை மோப்பம் பிடித்தபடி சுற்றிக் கொண்டிருந்தது, பிறந்து இரண்டு மாதங்களே ஆன அந்த நாய்க்குட்டி.

அதன் அருகே சென்ற அவன், அதன் முதுகுப்பகுதியைத் தடவிக் கொடுத்தான். பயத்தில் இருந்த அந்த நாய்க்குட்டியின் நடுக்கம், அவன் உள்ளங்கையில் பிரதிபலித்தது.

அதனிடம் பிஸ்கட் துண்டுகளை நீட்டியபோது மெல்ல அதன் வால் ஆடுவதைக் கவனித்தான் அவன். அதுவரை தாய்ப்பால் மட்டுமே உறிஞ்சி குடித்துப் பழகிய அது, ஆரம்பத்தில் பிஸ்கட் துண்டுகளைக் கடிக்கத் திணறி பின்பு வாயில் வைத்து அரைத்தது.

ஏதோ சாதித்துவிட்ட திருப்தியுடன், அங்கிருந்து கிளம்ப முற்பட்ட அவனைப் பின்தொடர்ந்து ஓடி வந்தது அந்த நாய்க்குட்டி.

புன்சிரிப்புடன் அதைத் தூக்கி, லாரியின் முன் இருக்கையில் வைத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தபோது, அவன் கண்கள் சாலையைக் கடக்கும் விலங்குகளின் மீது மிகவும் கவனமாக இருந்தன.

சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...