முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் நெல்லை சூப்பர்மார்க்கெட்டுக்கு சீல்... ரகசிய புகாரால் மாநகராட்சி நடவடிக்கை...

நெல்லை சூப்பர்மார்க்கெட்டுக்கு சீல்… ரகசிய புகாரால் மாநகராட்சி நடவடிக்கை…

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்றவைகள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரபல சூப்பர் மார்க்கெட் உள்ளது.

இந்த சூப்பர் மார்க்கெட், தடை உத்தரவின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் , வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிச் செல்வதாவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டதில், சூப்பர் மார்க்கெட் செயல்படுவது தெரியவந்து. பின்னர் சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை எச்சரித்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிறுவனத்தை பூட்டி வைத்தனர்.

மாநகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...

BREAKING NEWS சற்று முன் ஸ்பெயின் லாக் டவுன் அறிவித்தது: ஐரோப்பா ஆட்டம் கண்டது: ஜேர்மனி பிரான்ஸ் கிரீஸ் எல்லாம் கொரோனா

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. சற்று முன்னர் ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜேர்மனில் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு...

கொரோனாவிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது வைரஸின் நீடித்த உளவியல் விளைவுகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது என்று புதிய...