முகப்பு சினிமா நெல்லை மாவட்ட எல்லையில் `பாஸ்’ வழங்கல்! -சிகிச்சைக்குச் செல்ல முடியாமல் தவித்தவர்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்ட எல்லையில் `பாஸ்’ வழங்கல்! -சிகிச்சைக்குச் செல்ல முடியாமல் தவித்தவர்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் வள்ளியூர்ப் பகுதியைச் சேர்ந்தவர், மணிகண்டன். பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளியான அவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். பிறரிடம் உதவி பெற்று வாழ்வதை விடவும் சுயமாக தொழில் செய்து குடும்பத்தை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்.

Also Read: `கேரள எல்லை… கூடங்குளம்… மகேந்திரகிரி இஸ்ரோ மையம்!’ – கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நெல்லை

பார்வையற்ற நிலையிலும் பேனா விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். ரயில்களில் சென்னை வரை பயணம் செய்து பேனா விற்பனை செய்வதை மணிகண்டன் வழக்கமாக வைத்திருந்தார்.

Also Read: தூய்மைப் பணியாளர்களுக்கு `Guard of honour’ – அசத்திய நெல்லை மாநகரக் காவல்துறை 

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் போக்குவரத்து அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டதால் மணிகண்டன் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ

ஒரு மாத காலமாக வேலையின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் குடும்பம் வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதை அறிந்த ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-இன்பதுரை, அவரை வீடு தேடிச் சென்று சந்தித்தார். அவரது குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்கியதுடன் பண உதவியும் செய்தார்.

ஏற்கெனவே திசையன்விளை, வள்ளியூர், உவரி ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டயாலிசிஸ் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக நாகர்கோவில் மருத்துவமனைக்குச் செல்வதில் சிக்கல் இருந்தது. இது பற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, இரு மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியிலேயே அவசரத் தேவைக்குச் செல்வோருக்கு பாஸ் வழங்க ஏற்பாடு செய்தார்.

நோயாளிகள் சிகிச்சைக்குச் செல்ல உடனடி இ-பாஸ்

மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள் இருந்தால் உடனடியாக பாஸ் கிடைப்பதால் நோயாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Must Read

அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் முதல்வர்; என்னென்ன பிளான் பண்றார் பாருங்க!

ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் வேலையில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால்: `முழுமனதோடு செய்கிறேன்!’ – சொந்த நிலத்தைக் கோயிலுக்குக் கொடுத்த இஸ்லாமியர்

காரைக்கால் அருகே கட்டப்பட்ட கோயிலுக்கான இடத்தை, நில உரிமையாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், மத நல்லிணக்கத்தைப் பேணும்வகையில் புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.இந்து...

சந்திரபாபு பிறந்த நாள் கட்டுரை: ரம்மியா? ஜோக்கரா? 

13 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா...

இலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது; எப்படி இருக்கிறது பாருங்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை நாசா வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக்...

சம்பந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் ராஜபக்சவின் வேட்பாளர்!

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தனக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், வாக்குகளை இரா.சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற...