முகப்பு சினிமா பக்கத்து வீட்டில் விளையாட்டு... 12 வயதுச் சிறுவனுக்கு கொரோனா - அரியலூரில் சீல் வைக்கப்பட்ட கிராமம்

பக்கத்து வீட்டில் விளையாட்டு… 12 வயதுச் சிறுவனுக்கு கொரோனா – அரியலூரில் சீல் வைக்கப்பட்ட கிராமம்

அரியலூரில் 12 வயதுச் சிறுவன் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சிறுவனின் குடும்பம் மற்றும் அந்தக் கிராமம் முழுவதையும் போலீஸார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அரியலூர் அரசுமருத்துவமனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள 5 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தனர். இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். மற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படாததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களதுளின் உறவினர்கள் மற்றும் கடைகளில் வேலைபார்த்த 28 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் தொற்று இல்லாத ஒருவரின் மெடிக்கல் ஷாப்பில் வேலைபார்த்த பெண்கள் இருவருக்குக் கொரானோ தொற்று இருப்பது கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. செந்துறை, ராயபுரம் கிராமத்தில் வசித்த இரு பெண்களையும் இரவோடு இரவாகப் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி திருச்சி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதித்தனர்.

சிறுவன்

இந்தநிலையில், அதே ராயபுரத்தில் பெண் மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 12 வயதுச் சிறுவனுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறுவன் அந்த வீட்டிற்கு சென்று விளையாடியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ராயபுரம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக அறிவிக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு

அதிகாரிகள் சார்பில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தநிலையில் ராயபுரம் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏற்கெனவே செந்துறை பகுதியில் இரண்டு பேருக்குக் கொரோனா உள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...