முகப்பு சினிமா பணிச் சோர்விலிருந்து விடுபட நடனமாடிய காவல்துறை அதிகாரிகள்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பணிச் சோர்விலிருந்து விடுபட நடனமாடிய காவல்துறை அதிகாரிகள்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறை, சுகாதாரத்துறை, நம்பகமான செய்திகளை வழங்கும் ஊடகத்துறை எனப் பல துறையினர் கடும் நெருக்கடிக்கிடையே பணியாற்றி வருகின்றனர்.

பணியில் காவல்துறையினர்

பணி முடிந்து வீட்டுக்குச் சென்றாலும், தம் குழந்தைகளைக் கூட தொட்டுக் கொஞ்ச முடியாமல், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் சூழல் உருவாகியுள்ளது. அது பணிச்சுமையைத் தாண்டி மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. காவல்துறையைப் பொறுத்தவகையில், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளிய வருபவர்களை ஒழுங்குபடுத்துவது, ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என ஊரடங்கில் எந்த ஒரு பின்னடைவும் ஏ‌ற்ப‌ட்டு விடாமல் தீவிரமாகத் தங்களின் கடமையைச் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், பணியில் சோர்வு ஏற்படாமல் இருக்க, நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 13 மணி நேரங்களைக் கடந்து தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இரண்டு நிமிடம் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய பிஹு நடனமாடித் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இ‌ந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நாகோன் மாவட்டக் காவல்துறை, “இரவு 9.31 மணி, ஆனாலும் நாகோன் போலீஸ் கோவிட் போராளிகள் இன்னும் பணிபுரிந்து வருகின்றனர். அப்போது இது நடந்தது” எனக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளனர். பொதுமக்கள் பலரும் காவல்துறையைப் பாராட்டி, நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Must Read

சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை: தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?

ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...