முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் பயப்படாம கடன் கொடுங்க... வங்கிகளுக்கு நிர்மலா அட்வைஸ்!

பயப்படாம கடன் கொடுங்க… வங்கிகளுக்கு நிர்மலா அட்வைஸ்!

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், இரண்டாவது சிறப்புப் பொருளாதாரச் சலுகையை சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான இச்சலுகை அறிவிப்பில் சிறு குறு நிறுவனங்களுக்கு பிணை இல்லாமல் வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த அறிவிப்பால் நிதி நெருக்கடியில் உள்ள தொழில் துறையினர் வங்கிக் கடன்களை அதிகமாக வாங்கிப் பயன்பெற முடியும். ஆனால் குறித்த அச்சம் வங்கிகள் தரப்பில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், மற்றும் மோசடிகள் நேர்ந்தால் சிபிஐ, மத்திய விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் தணிக்கை கணக்கு ஆய்வாளர் ஆகிய மூன்று அமைப்புகளின் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மீது வங்கிகளுக்கு அச்சம் இருக்கிறது. இந்த மூன்று அமைப்புகள் குறித்தும் வங்கிகள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும், தயக்கம் இல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு அதிகமாகக் கடன் கொடுங்கள் எனவும் மத்திய நிதியமைச்சர் இந்திய வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் நேற்று (மே 22) நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பெரன்ஸ் வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். பொருளாதாரச் சலுகை அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகள் துரிதமாகக் கடன் வழங்குவது, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள்,கடன் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சிறு குறு நிறுவனங்களுக்கு பிணை இல்லாமல் ரூ.3 லட்சம் கோடி வரையிலான கடனை 9.25 சதவீத வட்டியில் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதை செயல்படுத்தும் விதம் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் போனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து வங்கிகளோ வங்கி அதிகாரிகளோ பயப்படத் தேவையில்லை எனவும், அரசாங்கம் அதைப் பார்த்துக்கொள்ளும் எனவும் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...