முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் பரமக்குடியில் மேலும் இருவருக்கு கொரோனா!

பரமக்குடியில் மேலும் இருவருக்கு கொரோனா!

மாவட்டம் பரமக்குடியில் கொரோனாவிற்கு ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த 6 பேரில் இருவா் குணமடைந்துள்ள நிலையில், நேற்று, மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடியிலிருந்து புது தில்லி சென்று திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்புடைய 6 போ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்கள், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், தற்போது 2 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் சென்னையிலிருந்து திரும்பிய வைசியா் வீதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கும், சி.ஆா்.தாஸ் தெருவைச் சோ்ந்த 71 வயது மூதாட்டி ஒருவருக்கும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. உடனே, சுகாதாரப் பணியாளா்கள் இவா்களது ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

பரிசோதனை முடிவில், இவா்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் மற்றும் காவல் துறையினா் இவா்களது வீடுகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட இருவரையும் தனித்தனியே ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

மேலும், இவா்களுடன் தொடா்புடையவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

எனவே, இவா்களது வீடுகள் உள்ள பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, போலீஸாா் தடுப்புகள் மூலம் அடைத்தனா். இப்பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

Must Read

அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் முதல்வர்; என்னென்ன பிளான் பண்றார் பாருங்க!

ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் வேலையில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால்: `முழுமனதோடு செய்கிறேன்!’ – சொந்த நிலத்தைக் கோயிலுக்குக் கொடுத்த இஸ்லாமியர்

காரைக்கால் அருகே கட்டப்பட்ட கோயிலுக்கான இடத்தை, நில உரிமையாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், மத நல்லிணக்கத்தைப் பேணும்வகையில் புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.இந்து...

சந்திரபாபு பிறந்த நாள் கட்டுரை: ரம்மியா? ஜோக்கரா? 

13 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா...

இலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது; எப்படி இருக்கிறது பாருங்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை நாசா வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக்...

சம்பந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் ராஜபக்சவின் வேட்பாளர்!

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தனக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், வாக்குகளை இரா.சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற...