முகப்பு சினிமா `பருமனான குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம்!' - குழந்தை நல மருத்துவர்

`பருமனான குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம்!’ – குழந்தை நல மருத்துவர்

ஏற்றத்தாழ்வு நிறைந்த பொருளாதாரம், வறுமை, குழந்தைகளின் பசியை ஆற்ற வேண்டிய அப்பாக்களின் வருமானம் மதுபானக் கடைகளுக்குச் செல்வது, உணவுப்பொருள்கள் சாப்பாட்டு மேஜைக்கு வருவதற்கு முன்னரே வீணாவது, சாப்பாட்டுக்கு மேஜைக்கு வந்த பிறகு வீணாவது என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தவிர, சரிவிகித உணவு பற்றிய விழிப்புணர்வு இல்லாததும், ஜங்க் உணவுப்பிரியர்களாக நம் வீட்டுக் குழந்தைகள் மாறி இருப்பதும்கூட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான காரணங்கள்தான்.

ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன, இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்படி இருப்பார்கள், இந்தப் பிரச்னையை எப்படி சரி செய்வது என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜிடம் பேசினோம்.

குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜ்

ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?

சரிவிகித சத்துகள் கிடைக்காத நிலை அல்லது சில சத்துகள் மட்டும் கிடைத்து, மற்ற நுண்ணூட்ட சத்துகள் கிடைக்காத நிலையைத்தான் ஊட்டச்சத்துக்குறைபாடு என்கிறோம். முன்பெல்லாம் ஊட்டச்சத்து குறைபாட்டின் கீழ் `அண்டர் நியூட்ரிஷன்’ பிரச்னை மட்டும்தான் இருந்தது. இப்போது `ஓவர் நியூட்ரிஷன்’ பிரச்னையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் கீழ் சேர்ந்துவிட்டது.

முதல் 1000 நாள்கள்…

ஒரு குழந்தை கருவில் உருவான முதல் நாளில் இருந்து அதன் 1000-வது நாள் வரையான நாள்களில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துகளும் கிடைத்திருக்க வேண்டும். அப்படிக் கிடைக்காத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. வயதுக்கு ஏற்ற உடல் எடையில்லாமல் மெலிந்து காணப்படுவது, மரபுக் காரணமின்றியும் குள்ளமாக இருப்பது என்று இருப்பார்கள். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பார்க்க 8 மாதக் குழந்தைபோல் இருக்கும் ஒரு குழந்தைக்கு, உண்மையில் ஒரு வயதாகியிருக்கும்.

Potato Chips

ஓவர் நியூட்ரிஷனும் ஊட்டச்சத்து குறைபாடே…

ஓவர் நியூட்ரிஷனும் ஊட்டச்சத்து குறைபாட்டின் கீழ்தான் வருமென்று சொன்னேன் அல்லவா? இந்த வகை குழந்தைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் வறுத்தது, பொரித்தது என்று மாவுச்சத்து, கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு, காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை ஒதுக்குபவர்களாக இருப்பார்கள். சில சத்துகள் மட்டுமே உடலில் சேர்ந்து பார்ப்பதற்கு குண்டாக இருப்பதால் இவர்களின் பெற்றோர்களும் `பிள்ளை போஷாக்காதான் இருக்கான் / இருக்கா’ என்று நினைத்துக்கொள்வார்கள்.

இரண்டாவது வகையினர் ஜங்க் ஃபுட் அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் பருமனாக இருப்பார்கள். இவர்களுடைய உடலில் கொழுப்பு அதிகம் இருக்கும். மேலே சொன்ன இரண்டு வகையினர் உடலிலுமே தாது உப்புகளும் வைட்டமின்களும் போதுமான அளவு இருக்காது. அனீமிக்காக இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்காது. ஓடி விளையாடுகிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். இந்த வகைக் குழந்தைகள் உடல் பருமன் காரணமாக ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டிருப்பதால், அந்த வகையிலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது. அதனால், அடிக்கடி சளி, காய்ச்சல் என்று அவஸ்தைப்படுவார்கள்.

Also Read: குழந்தைகளுக்கு நேரமேலாண்மையைக் கற்றுக்கொடுக்க டிப்ஸ்… #GoodParenting

மெலிவாக இருக்கிற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு…

இந்தக் கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தில் நூறு ரூபாய் செலவழித்து ஆப்பிள் வாங்கிக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இட்லி, சாம்பார், தேங்காய்ச் சட்னி, வேர்க்கடலை சட்னி, கொஞ்சம் நெய் என்று கொடுத்தாலே மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து என்று அனைத்தும் கிடைத்துவிடும். நம் ஊர் பொங்கலும் இதே மாதிரியான சரிவிகித உணவுதான். வெயிலில் விளையாட விட்டால் வைட்டமின் `டி’ கிடைத்துவிடும். கீரையும் காய்கறிகளும் சாப்பிட வைட்டமின் ஏ-வும் நுண்ணூட்டச் சத்துகளும் கிடைக்கும். தினமும் ஒரு கிளாஸ் பால் கொடுக்க கால்சியமும் கிடைத்துவிடும். அசைவ உணவுகள் அதிகபட்சமாக வாரத்துக்கு இரண்டு நாள் போதும். முட்டையென்றால் வாரத்துக்கு நான்கு நாள்கள் கொடுத்தால் போதும். மெலிவான குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் அல்லர். அவர்களுடைய குடும்பவாகு அப்படி இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Vegetables

Also Read: குழந்தைகளுக்கு சேமிப்பைக் கற்றுக்கொடுக்க வேண்டிய தருணம்… ஒரு வழிகாட்டுதல்!

குண்டாக இருக்கிற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு…

உங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்று நூடுல்ஸ் , பரோட்டா என்று செய்து கொடுக்காதீர்கள், வாங்கியும் கொடுக்காதீர்கள். டி.வி. பார்க்கிற நேரம் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. பாலில் கலந்துகொடுக்கிற இன்ஸ்டன்ட் டிஃபன் அயிட்டங்களைத் தவிர்க்க வேண்டும். இட்லியும் பொங்கலும் சாப்பிட்டாலும் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்க அனுமதிக்காதீர்கள்.”

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...