முகப்பு சினிமா `பறந்துவந்த காத்தாடி; அறுபட்ட கழுத்து!’ -வேலூரில் சிறைக் காவலருக்கு நேர்ந்த பரிதாபம்

`பறந்துவந்த காத்தாடி; அறுபட்ட கழுத்து!’ -வேலூரில் சிறைக் காவலருக்கு நேர்ந்த பரிதாபம்

காட்பாடியை அடுத்த சேனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு (36) என்பவர் வேலூர் மத்திய சிறையில் தலைமை சிறைக் காவலராகப் பணியாற்றுகிறார். பணி நேரம் முடிந்து வேலூர் அண்ணாசாலை வழியாக பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஊரீஸ் கல்லூரி அருகே சென்றபோது, திடீரெனப் பறந்துவந்த பட்டத்தின் மாஞ்சா நூல் அவரின் கழுத்தில் சிக்கியது. இதில், கழுத்து அறுபட்டு பைக்கிலிருந்து சாலையில் விழுந்த சுரேஷ்பாபு வலியில் துடித்தார்.

சி.எம்.சி மருத்துவமனை

அந்த வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து உடனே அருகில் உள்ள வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சுரேஷ்பாபுவை மீட்டு சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அந்தக் காவலர் நலமுடன் இருக்கிறார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மாஞ்சா நூலில் பட்டம் விட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாணாக் காத்தாடி விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிலர் பொழுது போக்கிற்காக வீட்டு மாடியிலிருந்து பட்டம் விடுகிறார்கள். சாதாரண நூல்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து கண்ணாடித் துகள்களை அரைத்து மாஞ்சா போடப்பட்ட நைலான் நூலைப் பயன்படுத்துகிறார்கள்.

வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார்

இது, சட்டப்படி குற்றம். அவ்வாறு மாஞ்சா நூலில் பட்டம் விடும் நபர்கள் மீது குற்ற வழக்குப் பதியப்படும். சில நேரங்களில், பட்டம் அறுந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கழுத்தில் சிக்கி அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. பட்டம் விடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 0416-2258532, 0416-2256966, 0416-2256802 ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு எஸ்.பி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம்’’ என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...