முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கேட்க கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கேட்க கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை கேட்டு நிர்பந்திக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

அதேசமயம், சில தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, தமிழகத்தில் உள்ள சில பள்ளி நிர்வாகங்கள் கடைசி பருவத்துக்கான கட்டணம் உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் கட்டணத்தை செலுத்துமாறும், வருகிற 2020-21ஆம் கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறும் நிர்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளன.

ஊரடங்கு அமலில் இருப்பதால் மாத ஊதியம் கிடைக்காமல் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவே கஷ்டமாக இருக்கும் நிலையில், கல்வி கட்டணத்தை கேட்டு நிர்பந்தித்தால் என்ன செய்வது என பெற்றோர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக புகார்களும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை கல்வி கட்டணத்தை கேட்டு வற்புறுத்த கூடாது எனவும், கட்டண சலுகை வழங்கலாம் எனவும் ஏற்கனவே தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. எனினும், தனியார் பள்ளி, கல்லூரிகள் இதனை பொருட்படுத்தாமல் வசூலிப்பட்தில் கண்டிப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை கேட்டு நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், கல்வி கட்டணம் செலுத்தும்படி மாணவர்களை வற்புறுத்தி வருதாக புகார்கள் வந்துள்ளன. மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் நடப்பு கல்வியாண்டு, வருகிற 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது. தாமதமாக செலுதப்படும் கட்டணத்துக்கு அபராதம் எதுவும் விதிக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read

ராமர் கோயில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா!

பாபர் மசுதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட புராணங்களை சான்றாக வைத்து உத்தரவு பிறபித்தவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கொகாய்...

கோவை: கொட்டும் மழை; உடையும் தடுப்பணை கான்கிரீட்; பறக்கும் கழிவு நுரை! மக்கள் வேதனை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த இரண்டாண்டுகள் தென்மேற்கு பருவமழை சிறப்பாகவே இருந்தது. ஆனால், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவுக்கு கைக்கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக...

`ஏழாவது இடத்த நான் எதிர்பார்க்கல!’ – ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த கணேஷ்குமார்

ஐ.ஏ.எஸ் தேர்வில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளார் நாகர்கோவில் புன்னை நகரில் வசிக்கும் கணேஷ்குமார். முதல் முறை தேர்வு எழுதி தோல்வியடைந்த கணேஷ் குமார், இரண்டாவது முறை தீவிரமாகப் படித்துத் தேர்வு எழுதி, இந்திய...

#Ayodhya : `கோயிலுக்குள் அனுமதி மறுப்பு; சாலைகள் மூடல்’ – உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி #LiveUpdates

அயோத்தி புறப்பட்டார் பிரதமர் மோடி!அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனி விமானத்தில் அயோத்தி புறப்பட்டார். 10.30 மணிக்கு லக்னோ வந்து அங்கிருந்து அயோத்தி வரவுள்ளார்.உச்சக்கட்ட...

இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?

கொரோனாவால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 2.17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டில்,1.62 கோடிப்பேர் வாக்களிக்கத் தகுதியடையவர்களாக இருக்கிறார்கள். அதிகமான வாக்காளர்களை,...