முகப்பு விளையாட்டு பாக். கிரிக்கெட் வாரியம் என்னைக் காப்பாற்றவில்லை...முகமது ஆசிப் புலம்பல்

பாக். கிரிக்கெட் வாரியம் என்னைக் காப்பாற்றவில்லை…முகமது ஆசிப் புலம்பல்

இஸ்லாமாபாத்: எனக்கு முன்பும் எனக்கு பின்பும் பல வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கினாலும் அவர்களுக்கு 2வது வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) என்னைக் காப்பாற்றவில்லை என்று சூதாட்ட புகாரில் தண்டனைக்கு உள்ளான முகமது ஆசிப் தெரிவித்தார்.  பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் (37). இவர் 22 டெஸ்டில் 105 விக்கெட், 58 ஒருநாள் போட்டியில் 46 விக்கெட், 11 டி20ல் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2010ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவருடன் சல்மான் பட், முகமது ஆமிர் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. மேலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவித்தார். அதன்பிறகு இவர் மீதான தண்டனைகளை ஐசிசி 2015ல் ரத்து செய்ததுடன், விளையாடவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அவரால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப முடியவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழிற்சாலை  அணிக்காக மட்டுமே அவரால் விளையாட முடிந்தது. சூதாட்டத்தில் மட்டுமல்ல போதை பொருள் பயன்படுத்தியதற்காக 2006ல் இவருக்கு பிசிபி ஓராண்டு தடை விதித்தது. அதே போதைப்பொருள் பிரச்சினைக்காக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலையான நாளையொட்டி (2012, மே 3) அளித்த பேட்டியில் முகமது ஆசிப் கூறியதாவது: எனக்கு முன்பும் எனக்கு பின்பும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தண்டனை கிடைத்தாலும் 2வது வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அவர்கள் அணிக்கு திரும்பினர். ஆனால் பிசிபி எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. என்னால் மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. என்னைப் போல் தவறு செய்தவர்கள் பலர் இன்று பிசிபி உடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறந்த பவுலர், பேட்ஸ்மேனாக உலகம் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறது. அவர்கள் என்னைப் பற்றி இன்னும் பேசுகிறார்கள். கிரிக்கெட் உலகில் நான் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறேன் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதுதான் எனக்கு இன்றும் பெருமை சேர்க்கிறது. அம்லா  போன்ற ஜாம்பவான்கள் என்னைப் பற்றி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. அது எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது. எப்படி இருந்தாலும் களத்தில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன். இப்போதும் டெஸ்ட் அணிக்கு திரும்ப விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக விளையாடுவேன். இவ்வாறு முகமது ஆசிப் கூறினார்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...