முகப்பு சினிமா `பாதிக்கப்படப்போவது நெசவாளர்களும்தான்!’ -மின்சாரத் திருத்தச் சட்டத்தால் கொதிக்கும் விவசாயிகள்

`பாதிக்கப்படப்போவது நெசவாளர்களும்தான்!’ -மின்சாரத் திருத்தச் சட்டத்தால் கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்திருத்தச்சட்டம் கார்ப்பரேட்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி “மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டத்தை விவசாய சங்கத்தினர் நடத்தியிருக்கிறார்கள். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகள் போரட்டம்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மின்சாரம், மாநில அதிகாரப் பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்துசெய்யப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் பரவலாக நிலவுகிறது.

இலவச மின்சாரம்

இச்சட்டத் திருத்தத்துக்கு, அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பல இடங்களில் கறுப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அதைத்தொடர்ந்து காட்டுமன்னார்குடி அருகிலுள்ள வீராணந்தபுரம் கிராமத்தில் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், விவசாயி ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் கொட்டகையில் இருந்த மின் மோட்டாருக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பெண்கள் உள்ளிட்ட சிலர் ஒப்பாரி வைத்துத் தங்கள் சோகத்தைச் சொல்லி அழுதனர்.

விவசாயிகள் போராட்டம்

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரனிடம் பேசினோம். “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், இலவசமல்ல. நாங்கள் உற்பத்திசெய்யும் விளைபொருள்களுக்கு மத்திய மாநில அரசால் லாபகரமான விலையைக் கொடுக்க முடியவில்லை.

இளங்கீரன்

இதற்கு ஈடாகத்தான், தமிழக அரசு 100 சதவிகித மானியத்தில் விவசாயிகளின் போர்வெல்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. ஆனால், இதை இலவச மின்சாரம் என்று சொல்லி எங்களை கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழகத்தின் உணவுக் களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதியில் உணவு உற்பத்திக்கு இலவச மின்சாரம் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கிறது. இலவச மின்சாரத் திட்டத்தினால் மூன்று போக நெல் சாகுபடி நடைபெறுகிறது.

இந்த நிலையில், புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தால் இலவச மின்சாரத்தைப் பறிக்கத் துடிக்கிறது மத்திய அரசு. இச்சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன் அடையும். மின்சார திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் மட்டுமல்ல, 2.30 லட்சம் நெசவாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். இவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மின்சார மானியமும் ரத்துசெய்யப்படும்.

விவசாயிகள் போரட்டம்

ஏழை எளிய மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதனால் விவசாயிகள் மற்றும் பல லட்சம் விவசாயத் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரமும் கேள்விக் குறியாகிவிடும். இதைக் கருத்தில் கொண்டு மத்திய – மாநில அரசுகள் புதிய மின் திருத்தச் சட்டத்தைக் கைவிட்டு இலவச மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும்” என ஆவேசமாகப் பேசினார்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...