முகப்பு சினிமா `பாலில் கொட்டப்பட்ட சட்னி; துண்டிக்கப்பட்ட கேஸ் ஸ்டவ்' - கடைக்காரர்களிடம் அத்துமீறிய குமரி போலீஸ்?

`பாலில் கொட்டப்பட்ட சட்னி; துண்டிக்கப்பட்ட கேஸ் ஸ்டவ்’ – கடைக்காரர்களிடம் அத்துமீறிய குமரி போலீஸ்?

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டிப் பகுதியில் ஓட்டலில் போலீஸார் அத்துமீறியதாகப் புகார் எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓட்டல்களில் பார்சல் வழங்கலாம் எனக் கூறிய நிலையில் காவலர்கள் ஓட்டலில் பிரச்னை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத் மாநில இணைச் செயலாளரும் சமூக ஆர்வலருமான காளியப்பன் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவு காரணமாக ஹோட்டல்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரையிலும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரையிலும் பார்சல் மட்டும் விற்பனை செய்யலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணத்திட்டைப் பகுதியில் சிறிய ஓலைக்கூரையால் வேயப்பட்ட டிபன் கடை ஒன்று இயங்கி வருகிறது.

இக்கடைக்கு இன்று காலையில் சென்ற போலீஸார் டிபனுக்காகத் தயாரித்து வைத்த சட்னியினை, பாலில் கொட்டியும், உணவு தயாரிக்கப் பயன்படுத்துகின்ற பாத்திரங்களைக் கீழே தள்ளியும், கேஸ் ஸ்டவ்வின் டியூபினைத் துண்டித்தும் அத்துமீறிய செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திட்டுவிளை பஸ் நிலையம் அருகேயும் வேறு ஒரு இடத்தில் இயங்கி வருகின்ற புரோட்டா கடையும் எந்தவித தனிமனித இடைவெளியினைக் கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு கடையிலும் ஏழுக்கும் மேற்பட்ட வேலையாட்கள் மதியம் 2 மணியிலிருந்து வேலை பார்க்கின்றனர்.

காளியப்பன்

இதுபோன்று இப்பகுதியில் இயங்கி வருகின்ற பிரி மார்ஜின் கடையில் அரசின் கட்டுபாட்டை மீறி பொதுமக்கள் கடையின் உள்ளே சென்று பொருள்களை உள்ளே சென்று வாங்கிச் செல்கின்றனர். இதனால் ஏழைகளுக்கு ஒரு கட்டுப்பாடும் வசதியானவர்களுக்கு ஒரு கட்டுப்பாடும் எனக் காவல்துறையினர் பாரபட்சம் காட்டுவதாக சந்தேகம் எழுகிறது.

குமரி மாவட்ட காவல்துறை கொரோனா நடவடிக்கையில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்று வருகின்ற நிலையில் பூதப்பாண்டி காவல்நிலைய போலீஸார் ஏழை டிபன் கடைக்காரரிடம் இவ்வாறு நடந்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றார்.

இதுகுறித்து பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “ஓட்டல்களில் உணவு தயாரிப்பதில் தவறு இல்லை. நாங்கள் சென்ற ஓட்டல்களில் டீ தயாரித்தார்கள். எனவே இதுவரை எட்டு ஓட்டல்களில் உள்ள கியாஸ் ஸ்டவ்களைப் பறிமுதல் செய்துள்ளோம்.

இந்த ஓட்டல்கள், ஏற்கெனவே நாங்கள் எச்சரித்தும் டீ போடுவதை நிறுத்தவில்லை. ஆகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றபடி பொருள்கள் எதையும் சேதப்படுத்தவில்லை” என்றார்.

இந்தநிலையில்,` விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகியின் குற்றச்சாட்டு காவல்துறைக்கு எதிரான தவறான பிரசாரம்’ என குமரி எஸ்.பி. ஸ்ரீநாத் செய்தியாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...