முகப்பு சினிமா பால் வாங்கச் சென்றவருக்கு காவலர்களால் நேர்ந்த கதி! - மேற்குவங்க அதிர்ச்சி #Lockdown

பால் வாங்கச் சென்றவருக்கு காவலர்களால் நேர்ந்த கதி! – மேற்குவங்க அதிர்ச்சி #Lockdown

கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. இவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது காவல்துறையினர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன. இதனால், மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கக்கூட வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவை கண்டு கொள்ளாத மக்கள்

மேற்கு வங்கத்தில் ஹவுரா எனும் பகுதியைச் சேர்ந்தவர் லால் சுவாமி. 32 வயதான இவர் பால் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியேறி கடை பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால், அப்பகுதியில் காவல்துறையினர் கடைகளை மூடும்படியும் அங்கிருந்தவர்களை வீட்டுக்குச் செல்லும்படியும் கூறி லத்திகளைக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர். காவல்துறையினர் தாக்குதலில் சிக்கிய லால் சுவாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லால் சுவாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Also Read: `டெல்லி மருத்துவருக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு!’ – கலங்கவைக்கும் பின்னணி

லால் சுவாமிக்கு இருந்த இருதய நோய்களால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், அவர் மனைவி காவலர்கள் தாக்கியதால்தான் தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் மக்கள் எதிர்கொள்ளும் இந்த ஊரடங்கு இன்னும் குழப்பமான சூழ்நிலையுடனேயே இயங்கி வருகிறது. தனி நபர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

மம்தா பானர்ஜி

இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “அத்தியாவசியப் பொருள்களை வழங்க வருபவர்களை அனுமதிக்க வேண்டும் எனக் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அவர்களைத் தடுக்கக் கூடாது. அரசின் உத்தரவைப் பின்பற்றாவிட்டால், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகளுக்கு வெளியே சோசியல் டிஸ்டன்சிங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “உணவு கிடைக்க சாத்தியம் இல்லாதவர்களுக்கும் உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றும் காவலர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Credits : India.com

Also Read: `கொரோனா பரவுது; 144 தடை உத்தரவு..!’ – தஞ்சை விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...